ஏழு நாள் எனக்கே எனக்காய்
- நிர்மலா
ரெண்டு மாற்றுத்துணி
செலவுக்கு உரைக்க
சின்னதாய் ஒரு அட்டை
ஒரு புத்தகம் ஒரு வாக்மேன்
கஸலாய் ஹரிஹரன்
துள்ளும் ரஹ்மான்
முதுகில் தொங்கும் சிறு பையில்
வீசி நடக்க வேண்டும் எனக்கு.
வெயில் உரைக்காத
துளிர் மழை நாளில்
ஆளில்லாத ரயிலில்
இரண்டாம் வகுப்பில்
ஆச்சா ஆச்சாவெனும்
கணவன்
அலுத்துக் கொள்ளும்
குழந்தைகளின்றி
தனியாய் நான்
அடையாளங்கள்
அத்தனையும் துறந்து
ராத்திரி கறிக்கு
உருளையா அவரையா
பால்காரன் வேலைக்காரி
எல்லாம் மறந்து
வருஷத்திற்கொன்றாய்
லடாக் தஞ்சாவூர்
ஹரித்வார் கோனார்க்
மதுரா காசி மானசரோவர்
நீளும் என் பட்டியல்
எட்டாம் நாள் மறுபடியும்
வட்டத்தில் இருப்பேன்.
--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - நிர்மலா - 1
பதிவு வகை : கவிதைகள், வார நட்சத்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
2 பின்னூட்டங்கள்:
அருமை
//வீசி நடக்க வேண்டும் எனக்கு.//
//எட்டாம் நாள் மறுபடியும்
வட்டத்தில் இருப்பேன்.//
வீசி நடந்த ஏழு நாளும் அடுத்த வருடம் அதே ஏழு நாட்கள் கிட்டும் வரை சக்கர(வட்ட)த்தை தங்கு தடையின்றிச் சுழலச் செய்யும் சக்தி கொண்டது. சரிதானே?
Post a Comment