மறந்துப்போவது குறித்த சில நினைவுக்குறிப்புகள் (மொழிபெயர்ப்பு)
- லக்கிலுக்
மொழிப்பெயர்த்தல் சுலபமல்ல. ஆங்கிலத்தை தமிழாக்குவதும், பிரெஞ்சினை தமிழாக்குவதும், ஏன் ஹீப்ருவை தமிழில் மொழிபெயர்ப்பதும் கூட இன்றைய உலகமயமாகிப்போன நிலையில் நமக்கு பிரச்சினை அல்ல. பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம் சுந்தர், ஜமாலன், சுகுணாதிவாகர், அய்யனார் மற்றும் மோகன்தாஸ் வகையறாக்கள் எழுதும் கதை, கவிதை, கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்ப்பது தான் இன்றைய தமிழ்சூழலில் சவாலான காரியமாக படுகிறது.
மூலத்தை அப்படியே மொழிபெயர்த்தல் ஒரு எழுத்தாளன் செய்யக்கூடியதல்ல. மூலத்தை முழுவதுமாக உள்வாங்கி அப்படியே தன் மொழிநடையில் மாற்றுபவன் தான் எழுத்தாளன் என்று சுஜாதாவோ, ரா.கி.ரங்கராஜனோ.. பட்டாம்பூச்சி புத்தக முன்னுரையிலோ அல்லது வேறு எங்கேயாவது சொல்லித் தொலைத்திருக்கிறார்கள்.
அந்த அரிய மொழிப்பெயர்ப்பு பணிகளை அவ்வப்போதாவது செய்துவிட வேண்டிய கட்டாயமும், அவசியமும் நமக்கு இச்சூழலில் கொஞ்சமாவது இருக்கிறது. பின்நவீனத்துவ பிச்சுவாப் பக்கிரியான சுகுணாதிவாகர் என்பவர் எழுதிய கவிதை கீழே. :
இடுக்குகளில் இருந்து...
நெடுநேரம் நினைவுவரவில்லை
ஒவ்வொன்றாய் முகங்களை
உதிர்த்துப்பார்க்கிறேன்.
பெயர்களின் குவியலில்
கைவிட்டுப் பார்த்தும்
அகப்படவில்லை ஏதும்.
நாவால் துழாவியும்
வெளிவராத மாமிசத்துண்டிற்காய்
வீணாய்ப்போயிற்று
நான்கைந்து ஈர்க்குச்சிகள்.
ஒரு சேப்டிபின்னின்
முனைகிழிந்து
வந்துதொலைத்தது ரத்தம்
வராததென்னவோ
இடுக்கில் சிக்கிக்கொண்ட
எச்சில் மாமிசம்.
பிரயத்தன இறுதியில்
விரல்துழாவி
எடுத்த இறைச்சியை
மீண்டும் சுவைக்கிறேன்.
என்னைக் கடந்து
அவன்
வெகுதூரம் சென்றபிறகுதான்
சடாரென ஒளிர்கிறது
அவன் பெயர்.
இது எந்த மொழி என்று புரியாமல் கோவணத்தை உருவிக்கொண்டு ஓடியவர்கள் ஏராளம். பின்நவீனத்துவ பிடாரிகள் எழுதுவது முழுவதையும் என்னால் தமிழ்ப்படுத்த இயலவில்லை என்றாலும், இக்கவிதையை மட்டுமாவது தமிழ்ப்படுத்த முயற்சிக்கிறேன்.
மொழிபெயர்க்கப்பட்ட கீழ்க்கண்ட கவிதையை புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் :
தேவையான பொருட்கள் :
1) பெல்ட் போட்ட டவுசர்
2) டவுசருக்குள் பாதுகாப்புக்கு ஒரு கோவணம்
அக்குளில் இருந்து...
கூட சரக்கடிச்ச
நாதாரிப்பய
நவுந்து போறான்..
கூப்புடலாம்னா பார்த்தா
அவன் பேரு என்னா..
அய்யோ மறந்துப்போச்சே?
லுங்கிய ஏத்திக்கினு
லோடு ஏத்த
மார்க்கெட்டுக்கு போனா..
அதே நாதாரி!
கூப்புடலாம்னா பார்த்தா
அவன் பேரு என்னா..
அய்யோ மறந்துப்போச்சே?
காஜா பீடி
வலிச்சிக்கினு
மாநகராட்சி கக்கூஸ்லே
புத்தன் மாதிரி
உட்கார்ந்தப்போ தான்
டகால்னு
ஞாவகம் வருது
அவன் பேரு
டமார் குமாரு!!
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - லக்கிலுக் - 6
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : கவிதைகள், நகைச்சுவை, மொழிபெயர்ப்பு, வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - லக்கிலுக் - 5
புதியதாக வலைப்பதிய வருபவர்களுக்கு சில டிப்ஸ்!
- லக்கிலுக்
குழுமத்தில் இருப்பவர்கள் எல்லோருமே வலைப்பதிகிறீர்களா, வலைப்பதிவு வைத்திருக்கிறீர்களா என்று தெரியவில்லை. வலையுலகுக்கு புதியதாக வரும் பதிவர்களுக்கு முன்பெல்லாம் மூத்தப் பதிவர்கள் டிப்ஸ் கொடுப்பார்கள். இப்போது டிப்ஸ் தரும் ஆட்கள் இல்லாததாலும், புதியதாக வரும் பதிவர்களை மூத்தப் பதிவர்கள் சிலர் பின்னூட்டம் போட்டு, ராக்கிங் செய்து வலையுலகை விட்டு துரத்தியடிப்பதாலும் சில டிப்ஸ் கொடுக்க வேண்டியது நம் கடமையாகிறது. ஓக்கே கமிங் டூ த பாயிண்ட் :
டைரக்ட் மார்க்கெட்டிங் :
தமிழ்மணத்தில் எந்தப் பதிவை பார்த்தாலும் சிரமம் பார்க்காமல் நுழைந்து விடுங்கள். பதிவை முழுவதாக படிக்க வேண்டுமென்ற அவசியமில்லை. லைட்டாக ஒரு லுக் விட்டு அப்பதிவில் முத்தாய்ப்பாக இருக்கும் ஏதோ ஒரு கருமத்தை Quote செய்து "அருமையாக சொன்னீர்கள். நல்ல பதிவு. வாழ்த்துக்கள்!" என்றொரு பின்னூட்டத்தை போட்டு விட்டு வந்துவிடுங்கள். நம்முடைய பதிவையும் எவனோ ஒரு கம்முனாட்டி பாராட்டிவிட்டானே என்று மெய்சிலிர்த்து சம்பந்தப்பட்ட பதிவர் உங்களது Blogger Profile மூலமாக உங்கள் பதிவுக்கு வந்து பதில் மொய் வைக்கக்கூடிய வாய்ப்பிருக்கிறது. தமிழ் மணத்தின் "ம திரட்டி" மொத்தத்தையும் உங்களது "அருமையாக சொன்னீர்கள்" என ஆரம்பிக்கும் பின்னூட்டத்தின் மூலமாக ரொப்பினீர்கள் என்றால் இன்ஸ்டண்ட் பலன் நிச்சயம் உண்டு.
டெலி-மார்க்கெட்டிங் :
சில கோயிந்து பதிவர்கள் தங்களது டெம்ப்ளேட்டில் கொடூரமான தங்கள் முகத்தை போட்டு கீழே போன் நம்பரையும் கொடுத்து "நிறைய பேசலாம், வாருங்கள்" என்று போட்டிருப்பார்கள். சும்மா டைம் பாஸுக்கு அவர்களுக்கு போன் செய்து, "உங்க பதிவுகளையெல்லாம் தொடர்ந்து படிக்கிறேன். ரொம்ப நல்லா எழுதறீங்க. உங்க சிந்தனைகளோடு ஒத்த சிந்தனை கொண்டவன் நான் என்று ஆரம்பியுங்கள். கொஞ்சம் அழுத்தமாகவே உங்கள் வலைப்பூவின் முகவரியையும் சொல்லிவிடுங்கள். உங்களது டெம்ப்ளேட்டிலும் உங்கள் போன் நம்பரை பிரசுரித்தால் எவனாவது வேலையத்தவன் போன் செய்து பேசுவான். இவ்வாறாக உங்கள் வலைப்பூவை தொலைபேசி வாயிலாகவும் மற்றவன் தலையில் கட்டமுடியும்.
அட்வெர்டைஸிங் :
ஒரு பதிவை போட்டுவிட்டு பின்னூட்டங்கள் வராமல் தேவுடு காத்திருப்பதை விட அனானிமஸாக நீங்களே உங்களை பாராட்டி ஒன்று, ரெண்டு பின்னூட்டங்களை போட்டுக் கொள்ளுங்கள். இந்த பின்னூட்டக்கயமை மூலமாக தமிழ்மணத்தின் முகப்பில் எப்போதும் நின்று கொண்டிருக்கலாம். ஏதோ பின்னூட்டம் வந்திருக்கிறதே, விஷயம் இருக்கிற பதிவு தான் போலிருக்கு என்று சில அப்பாவிகள் வந்து மிக சுலபமாக தூண்டிலில் மாட்டிவிடக்கூடும். அப்படியும் வேலைக்கு ஆகவில்லையென்றால் சம்பந்தப்பட்ட பதிவின் லிங்கை காப்பி செய்துகொண்டு, தமிழ்மணத்தில் வந்திருக்கும் எல்லாப் பதிவுகளுக்கு போய் "நல்ல பதிவு" என்று சொல்லிவிட்டு லிங்கை நைசாக சொருகிவிட்டு வந்துவிடுங்கள். வயதிலும் மூத்தப் பதிவரான டோண்டு சார் போன்றவர்களுக்கு இதுபோன்ற பின்னூட்டங்களை போட்டால் நல்ல பலன் கிடைக்கும்.
மக்கள் தொடர்பு :
ஒரே ஒரு ஐடி மட்டுமே வைத்துக் கொண்டிருந்தால் வலையுலகில் நாக்கு வழித்துக் கொண்டு உட்கார்ந்திருக்க வேண்டியது தான். குறைந்தது பத்து ஐடிக்களாவது ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் வைத்துக் கொள்ளுங்கள். ஒரு ஐடியில் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை எதிர்த்து சூடான ஒரு பதிவு போடுங்கள். இன்னொரு ஐடியில் அதே பதிவை கடுமையாக தாக்கி முதலாளித்துவம் பேசுங்கள். இரண்டு ஐடியிலும் மாறி மாறி சண்டைப் போட்டுக் கொண்டால் மற்ற பதிவர்கள் இடையே ஒரு சலசலப்பு ஏற்படும். "என்ன பிரச்சினை?" என்று பிரச்சினைகளுக்கு ஆளாய் பறக்கும் மொக்கை மற்றும் கும்மிப் பதிவர்கள் உங்களை சூழ்ந்து கொள்வார்கள். ஆளாளுக்கு அவரவர் சர்க்கிளில் உங்கள் ஐடிக்களை பிரபலப்படுத்துவார்கள். வலையுலகில் மிகப்பிரபலமாக இருக்கும் 'லக்கிலுக்' மற்றும் 'இலைக்காரன்' ஐடிக்கள் இப்படித்தான் பிரபலமடைந்ததாக வாத்ஸ்யாயனர் தன்னுடைய காமசூத்ரா புத்தகத்தில் எழுதியிருக்கிறாராம்.
ஈவண்ட்ஸ் மேனேஜ்மெண்ட் :
பொழப்பத்தவர்கள் சிலர் அவ்வப்போது போண்டாவோ, பஜ்ஜியோ வாங்கிக் கொடுத்து பதிவர் சந்திப்புகள் நடத்துவது வழக்கம். அதுபோலவே சில நாட்களாக சோறு போட்டு பதிவர் பட்டறையும் நடத்துகிறார்கள். இதுபோன்ற ஈவெண்ட்ஸ்களில் தவறாமல் கலந்துகொண்டால் அந்நிகழ்ச்சிகள் குறித்து சிலாகித்து போடப்படும் எல்லாப் பதிவுகளிலும் உங்கள் பெயர் கண்டிப்பாக இடம்பெறும். யாருக்கு தெரியும்? நாளைக்கே இதன்மூலமாக நீங்கள் சன்நியூஸிலும், ஆனந்தவிகடனிலும் கூட பேட்டி தர வாய்ப்பிருக்கிறது.
பிராண்டிங் :
இதை 'பிறாண்டிங்' என்று படிக்கவேண்டாம், Branding என்று படியுங்கள். படிக்கும் எல்லாப் பதிவர்களுக்கும் "நல்ல பதிவு, சூப்பர்" என்று சொம்படித்துக் கொண்டிருந்தால் 'நடுநிலை பதிவர்' என்ற பிராண்டிங் உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். அவ்வாறில்லாமல் டோண்டு சாரையோ, இட்லிவடையையோ எதிர்த்து ஒரு பதிவு போட்டாலோ அல்லது பின்னூட்டம் போட்டாலோ "பார்ப்பனீய எதிர்ப்பாளர்" என்ற பிராண்டிங் கிடைக்கும். அதுவும் வேண்டாமா? 'கலைஞர் கருணாநிதி' வலைப்பூவுக்கு போய் கலைஞரை திட்டி ஒரு சின்ன பின்னூட்டம் போடுங்கள். உடனடியாக 'பார்ப்பன அடிவருடி' பிராண்டிங் கிடைக்கும். இது எதுவுமே வேண்டாமென்றால் உங்கள் பதிவுகளில் நல்ல பிள்ளையாக 'நான் பார்த்த முதல் படம்', 'நான் சைட்டு அடித்த பிகர்', 'நானும் மொக்கையான ஆசிப் அண்ணாச்சியும்' என்று பதிவு போட்டுக் கொண்டிருங்கள். சிறந்த மொக்கை மற்றும் கும்மிப் பதிவராக பிராண்டிங் செய்யப்படுவீர்கள்.
அப்படியில்லையேல் ஒம்மா, த்தா, யோனி போன்ற வார்த்தைகளை பின்னூட்டங்களிலும், பதிவுகளிலும் ஆங்காங்கே அள்ளித் தெளியுங்கள். உயிர்மை, கவிதாச்சரண், காலச்சுவடு ரேஞ்சு புத்தகங்களில் வரும் கட்டுரைகளில் சில பத்திகளை மனப்பாடம் செய்து வார்த்தைகளை ஆங்காங்கே மாற்றிப் போட்டு எல்லா இடத்திலும் கும்மியடியுங்கள். 'பின்நவீனத்துவ' பிராண்டிங் நிச்சயம் கிடைக்கும்.
கஸ்டமர் Feedback :
உங்கள் பதிவுகள் சூப்பராக இருந்தாலும் சரி, மொக்கையாக இருந்தாலும் சரி. வந்து பின்னூட்டம் போட்டு உங்களை போற்றி புகழ்ந்து கொண்டிருக்க எத்தனை பேருக்கு நேரம் இருக்கப் போகிறது. ஆகையால் தன் கையே தனக்குதவி என்ற அடிப்படையிலும், நமக்கு நாமே திட்டத்திலுமாக சேர்ந்து வெவ்வேறு பெயர்களில் நீங்களே உங்கள் பதிவுகளுக்கு பின்னூட்டம் போட்டுக் கொள்ளுங்கள். பத்து பின்னூட்டங்கள் நல்ல பதிவு என்ற ரேஞ்சிலும் இடையிடையே ஒன்றிரண்டு மோசமான பதிவு, தட்டையான சிந்தனை என்றும் மாற்றி மாற்றி போட்டுக் கொள்ளுங்கள். உங்களுடைய ஒவ்வொரு பதிவுக்கும் இருபதுக்கும் மேற்பட்ட கமெண்டுகள் வருவதாக காட்டிக் கொண்டால் வலையுலகில் கொஞ்சம் கெத்தாக வலம் வரமுடியும்.
ஓக்கே, ரொம்ப போரடிக்குது இல்லே. Bye for now.
பதிவு செய்தது : பண்புடன் at 3 பின்னூட்டங்கள்
பதிவு வகை : நகைச்சுவை, வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - பெனாத்தல் சுரேஷ் - 1
Wifeology - பைனல் எக்ஸாம்!
- பெனாத்தல் சுரேஷ்
இவ்வளவு நாள் இல்லறத்தியலைப் படித்து மகிழ்ந்த இனிய மாணாக்கர்களே, நம் இல்லறத்தியல் பாடத்தை "பசுமை நிறைந்த நினைவுகளே" என்று பாடி மூட்டை கட்டுவதற்கு முன்* தேர்வு ஒன்று வைக்கவேண்டாமா?
மாதிரி வினாத்தாள், விடைகளுடன் உங்களுக்காகத் தயாரிக்கப்பட்டிருக்கிறது. கேள்விகளையும் விடைகளையும் பார்த்து, இல்லறத்தியல் பட்டம் வாங்க நிர்வாகம் வாழ்த்துகின்றது.
மாதிரி வினாத்தாள்
பாடம்: இல்லறத்தியல்
நேரம்: 3 மணி மொத்த மதிப்பெண் - 100
I. கோடிட்ட இடங்களை நிரப்புக: (5x1 = 5)
1. எல்லா வாக்குவாதங்களிலும் சரியான கட்சி _______________ உடையதே. (மனைவி)
2. தொலைக்காட்சிப் பெட்டியில் பார்க்கக் கூடாதவை ___________ (விளையாட்டு நிகழ்ச்சிகள்)
3. இல்லற வாழ்க்கை இனிதே அமைய, தவறென்றால் ஒத்துக்கொள், சரி என்றால்? _________________________ (பொத்திக்கொள்)
4. ______________ வந்திட _______ பறந்து போம். (இல்லாள், இன்பம்)
5. சம்பளம் வரும் பின்னே, __________ வரும் முன்னே (ஷாப்பிங்)
II. ஒரு வரியில் விடையளி: (5 x 2 = 10)
1. வெற்றி பெற்ற எல்லா ஆணின் பின்னாலும் ஒரு பெண் இருப்பாள். எப்படி?
பதில்: ஆச்சரியத்துடன் பார்த்துக்கொண்டு
2. ஏன்?
பதில்: நம்மை மீறி எப்படி?
3. அபாய நண்பர்கள் யார் யார்?
பதில்: சந்தர்ப்பம் தெரியாத அரிச்சந்திரர்கள்
4. குடும்பத்தில் குண்டு வைப்பவர்கள் யார்?
பதில்: திட்டம் தீட்டியே உண்மை பேசும் தீவிரவாதிகள்.
5. தனிமையிலும் உஷாராக இருக்கவேண்டிய இடங்கள் யாவை?
பதில்: மனைவியின் நண்பர்கள் உலாவும் இடங்கள் அனைத்தும்.
III. சரியா தவறா கூறுக: 5 x 3 = 15
1. தாய்க்கும் தங்கமணிக்கும் கருத்து வேற்றுமை ஏற்படும்போது உண்மையின் பக்கம் நிற்கவேண்டும். தவறு. உண்மையா? அப்படி என்றால் என்ன?
2. உலகத்திலேயே மிகக்கஷ்டமான கேள்வி - "இந்த ட்ரெஸ்லே நான் எப்படி இருக்கேன்?" என்பதுதான். சரி. சாதா சரி இல்லை, 150% சரி.
3. நண்பர்களுடன் பார்ட்டி - மனைவியின் முழுச் சம்மதத்துடன் மட்டுமே செல்லவேண்டும். தவறு.. அய்யோடா - உங்களுக்கு என்ன வயசு? குட்டீஸ் எல்லாம் இல்லறத்தியல் படிக்க வரக்கூடாது..
4. 10 பந்தில் 10 ரன் அடித்தார்களா என்பதைவிட, அபிக்கு ஆதியால் இன்று என்ன தொந்தரவு வந்தது என்பதே முக்கியம். சரி. வேற வழி?
5. ஐந்து நிமிட ரங்கமணி மின்னரட்டை, 3 மணிநேர தங்கமணி போன் அரட்டையை விட அதிக நேர விரயம். சரி. பண்ணிப்பாருங்க சார் தெரியும்.
IV. கீழ்க்காணும் பத்தியைப் படித்து, வரும் கேள்விகளுக்கு விடையளிக்கவும். 5 x 4 = 20
தங்கமணி, ரங்கமணிக்கு குட்டி, கெட்டி என்று இரு குழந்தைகள். ஒரு திங்கட்கிழமை மாலை, குட்டியின் பள்ளியிலிருந்து ஆசிரியை அழைத்து, குட்டி ரொம்ப சுட்டித்தனம் செய்வதாகவும், கூட இருக்கும் பிள்ளைகளை வம்புக்கு இழுப்பதாகவும் புகார் கூறினார். அதே நாளில், கெட்டியின் ஆசிரியை, கெட்டி பாடத்தில் முதலாவதாக வந்ததாகக்கூறினார். அலுவலகத்தில் இருந்து திரும்பிய ரங்கமணியிடம் தங்கமணி இவற்றை விளக்கினார்.
அவ்வாறு விளக்குகையில்,
1. உங்கள் பிள்ளை என்று கூறப்படுபவர் யார்? (குட்டி)
2. என்னோட தங்கம் என்று அழைக்கப்படுவது யார்? (கெட்டி)
3. யாருக்கு ரங்கமணியின் குடும்ப குணங்கள் வம்சாவழியில் கலந்திருக்கின்றன? (குட்டி)
4. குட்டி செய்த குறும்புகளுக்கு யார் பொறுப்பேற்க வேண்டும்? (ரங்கமணி)
5. கெட்டி நன்றாகப் படிப்பதற்கு யார் காரணம்? (தங்கமணி)
V விரிவான விடையளி - 5 x 10 = 50
1. ராஜ்கிரண் தங்கமணிகளைப் பற்றி விவரித்தது எங்ஙனம்?
"எல்லா மனுசனும் சந்தோசமா மட்டும் இருந்திரக்கூடாதுன்னுதான் ஆண்டவன் ஆபீஸைப் படைச்சான். ஆபீஸ் பாஸ் பண்ற தொல்லைலே அவன் சந்தோசத்தை மறப்பான்.. ஆனா எல்லா நேரமும் ஆபீஸ்லேயே இருந்திற முடியாதுன்னுதான் தங்கமணியப் படைச்சான்..
பாடல் தொடர்கிறது.. தெய்வம் அது தாய்க்கும் கீழேதான் ரேஞ்சில் ..
"கொடுமை அது ஆபீஸு வேலைதான்..
என், தங்கமணியும் பாஸுக்கு மேலதான்.."
2. இடம் சுட்டி பொருள் விளக்குக : "நீங்க சொல்றதுதாங்க சரி"
இடம்: மனைவி, கணவனிடம் சொல்கிறாள்.
பொருள்: கணவன், மனைவியின் ஆசையை பூடகமாக (நூறு முறை சொன்னதன் பின்) அறிந்து, அவள் ஆசையைத் தன் ஆசை போல வெளியிட்டதால், மனைவி, பெருந்தன்மையுடன் கணவன் முடிவுக்குக் கட்டுப்படுகிறாள்.
3. தங்கமணிக்கள் எப்போது குறை சொல்லாமல் இருப்பார்கள்?
தங்கமணிக்கள் எப்போதும் குறை சொல்லிக் கொண்டே இருப்பார்கள் என்பது ஒரு தவறான பொதுமைப்படுத்தலே ஆம். ஒவ்வொரு நாளும் சுமார் 8 மணி நேரம் தூங்கும் போதும், 8 மணிநேரம் வேறு பணிகளில் தங்கமணி ரங்கமணி சந்திக்காமல் இருக்கும்போதும் எந்தத் தங்கமணியும் குறை கூறுவதே இல்லை. மீதி உள்ள சிறிது நேரத்தில் பேசுவது, காலத்தால் சிறிதெனினும் ஞாலத்தின் மாணப்பெரிதாகத் தோற்றமளிக்கிறது அவ்வளவே.
4. குறள் விளக்கம் கூறுக:
செல்லாவிடத்துச் சினம் தீது, செல்லிடத்தும் இல்லை அதனின் தீய பிற.
வள்ளுவர் கூறுகிறார், நம் கோபம் செல்லுபடியாகாத மனைவிகள் இடத்தில் கோபப்பட்டால் அதன் விளைவுகள் விபரீதமாக வீக்கமாக தீப்புண்ணாக முடியும் அபாயம் இருக்கிறது, எனவே அங்கே கோபப்படக்கூடாது. அதே நேரத்தில், அக்கோபத்தை "செல்" இடத்தில் காட்டினால், செல்போன் உடைந்து தூள்தூளாகி பெரும் பணச்செலவு வைக்கும், எனவே "செல்" இடத்தும், இல்லை அதனின் தீய பிற.
5. பழமொழி விளக்குக: மனைவி சொல்லே மந்திரம்.
கோவிலில், பூஜைகளின் போது சொல்லப்படும் மந்திரங்கள் பெரும்பாலும் நமக்குப் புரிவதில்லை. யாரைத் திட்டுகிறார்கள் யாரை வாழ்த்துகிறார்கள் என்பனவெல்லாம், பின்னாள் விளைவுகள் அல்லது விளக்கங்கள் படித்தபின்னே ஓரளவு புரிந்ததுபோல தோற்றமளிக்கும். அதேபோல், மனைவி பேசும்போதும், முதலில் நமக்கு எதுவும் புரியாது. ஆனால், அந்தச் சொல்பேச்சு கேளாமல் விட்டால் முதலில் விளக்கங்களும், அதையும் மீறினால் விளைவுகளும் வரும். இந்த ஒற்றுமையினாலேயே மனைவி சொல்லே மந்திரம் என்று சொல்லப்படுகிறது.
*************************************************************
விடைகளைக் கொடுக்காமல் தனியாகத் தரலாம் என்றுதான் நினைத்தேன். ஆனா இது என்ன தங்கமலை ரகசியமா? எல்லாருக்கும்ம் தெரிஞ்சதுதானே அப்படின்னு போட்டே விட்டேன்.
* குறிப்பு = யாரு கண் பட்டுதோ, எங்கே இருந்து போன் கால் வந்ததோ தெரியல.. தங்கமணி இதைப் படிக்க ஆரம்பிச்சு, அன்பான கட்டளையில் ஆரம்பித்து, மென்மையான மிரட்டல், விபரீதமான வேண்டுகோள் என பரிணாம வளர்ச்சி பெறத் தொடங்கும் முன், நல்லோர்க்கு அழகு சொல்லாமல் செய்தல் என்ற வாக்கின்படி, இந்தத் தொடர் முடிக்கப்படுகிறது.
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : நகைச்சுவை, வார நட்சத்திரம்