செல்லமுத்து குப்புசாமி - அறிமுகம்
உங்களில் பலருக்கு செல்லமுத்து குப்புசாமி பற்றித் தெரிந்திருக்கும். கரையோரம், பங்கு வணிகம் மற்றும் NEXT INDIA ஆகிய மூன்று வலைப் பதிவுகளைப் பேணி வருகிறார்.
http://karaiyoram.blogspot.com
http://panguvanigam.blogspot.com
http://nextindia.blogspot.com
இப்போது சத்தமில்லாமல் இயங்கும் பதிவர். அவரது வலைப்பதிவு career (அப்படி ஒன்று இருக்கிறதா?) இன் உச்ச கட்டமாக முன்னொரு காலத்தில் எழுதப்பட்ட 'அண்ணியின் அணைப்பில்' என்ற கதையைக் கூறலாம்.
http://karaiyoram.blogspot.com/2006/06/blog-post_30.html
ஷேர் மார்க்கெட்டில் நட்டமில்லாமல் இலாபம் ஈட்டுவது குறித்து அவர் எழுதிய 'இழக்காதே' புத்தகம் நவீனத் தமிழ் 'நான்பிக்ஷன்' எழுத்தில் மிக முக்கியமான மைல் கல். 2006 ஆம் வருடம் சென்செக்ஸ் 12 ஆயிரம் புள்ளியில் இருந்து 10 ஆயிரமாகச் சரிந்த போது எழுதிய இந்த நூல், 2008 இல் 21 ஆயிரத்தில் இருந்து 9 ஆயிரமாகச் சுருங்கிய போதும் பொருத்தமான ஒன்றாகவே நிற்கிறது.
செல்லமுத்து குப்புசாமியின் இன்னொரு புத்தகம் 'வாரன் பஃபெட் - பணக் கடவுள்'. சிறு வயதில் பேப்பர் போட்டுச் சம்பாதித்த வாரன் பஃபெட் உலகின் நம்பர் ஒன் செல்வந்தர் ஆன கதையை, அவரது வாழ்க்கையை தெளிவாகப் பதிவு செய்திருக்கும் நூல்.
http://www.kamadenu.com/cgi-bin/authour_search.cgi?authname=Chellamuthu%20Kuppusamy
நமது பண்புடன் குழுமத்திற்காக ஈழப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளியை ஏழு கட்டுரைகளில் ஒரு மினி-தொடராகத் தருகிறார்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - செல்லமுத்து குப்புசாமி - அறிமுகம்
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : அறிமுகம், வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - சுகிர்தராணி - அறிமுகம்

"கைப்பற்றி என் கனவுகேள்", "இரவு மிருகம்", "அவளை மொழிபெயர்த்தல்" ஆகிய மூன்று தொகுதிகளாக அவருடைய கவிதைகள் வெளியாகியுள்ளன. சுகிர்தராணியின் கவிதைகள் பெண் உடல் மொழி பற்றியும், தலித் விடுதலை பற்றியும் பெருங்குரலெழுப்புகின்றன. தமிழ் இலக்கிய உலகில் பெரும் விமர்சனத்துக்கும், கலகத்துக்குமான பாதையை உண்டாக்குபவை.
தமிழில் எம்ஃபில் பட்டம் பெற்றவர், வேலூர் மாவட்டத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றுகிறார். பண்புடன் ஆண்டு விழா கொண்டாட்டத்திற்காய் அவரின் அனுமதியுடன் இரவு மிருகம் தொகுப்பிலிருந்து சில கவிதைகள் இடுகிறோம்.
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : அறிமுகம், சிறப்பு விருந்தினர்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - மோகன்தாஸ் - அறிமுகம்
ஆண்டுவிழாக் கொண்டாட்டங்கள் சிறப்புடன் சென்று கொண்டிருக்கும் பண்புடன் குழுமத்திற்கும் அதன் உறுப்பினர்களுக்கும் வாழ்த்துக்களைச் சொல்லிவிட்டு என்னைப் பற்றிய சிறிய அறிமுகத்தைக் கேட்டார் ஆசிப். சின்னதென்ன சுயசொறிதல் என் வழக்கம் தானே, பெரிசாவே செஞ்சித்தர்றேன் என்றூ சொல்லியிருந்தேன். என் சுயசொறிதல் இப்ப,
ஆசிப்பிற்கு எப்பொழுதுமே என் மேல் தனிப்பட்ட பிரியம் உண்டென்று நினைத்து வந்திருக்கிறேன், அது உண்மையாகத்தான் இருக்க முடியும் போலிருக்கிறது. கடந்த நான்கைந்து மாதங்களில் நான் அவரிடம் செய்தது போல் ஒன்றை மற்றவர்களிடம் செய்திருந்தால் குறைந்தபட்சம் நானாய் வந்து பேசினால் பேசுவோம் என்று அளவிலாவது விட்டு விலகியிருப்பார்கள். ஆனால் ஆசிப் அந்த குறைந்தபட்ச வருத்தத்தைக் கூட தரவில்லை. ஆனாலும் ஆசிப் கேட்டும் எதையும் செய்ய முடியவில்லையே என்ற வருத்தம் எனக்கு அதை விட பெரியதாய் இருக்கும் என்று உணர்ந்திருப்பாராயிருக்கும். ப்ராஜக்ட் ஓரளவிற்கு முடிந்து கடைசி கட்ட டெஸ்டிங் போய்க் கொண்டிருக்கும் வேளையில் ஆசிப் பண்புடன் ஆண்டுவிழாவிற்காக எழுதணும் என்று கேட்டதும் மறுக்க முடியவில்லை.
எனக்கும் ஆசிப்பிற்குமான பழக்கம் தொடங்கியது மரத்தடியில் என்று சொல்லலாம், அத்தனை நல்லவிதமாக இல்லை தான். ஆசிப்பிற்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. நான் எழுதிய கதையொன்றிற்கும் தனிப்பட்ட முறையில் எனக்குமாக, ஆதரவாக சிவா அண்ணன் மடல் தட்டிக் கொண்டிருந்த பொழுது எங்கிருந்தோ விழுந்த ஆசிப்பின் நக்கல் மடல் கொஞ்சம் என்னிடம் கோபத்தைக் கொண்டுவந்தது. நான் இப்பொழுதும் நினைத்துக் கொள்வதுண்டு என் கிறுத்துறுவ புத்தி சீண்ட நான் ஆசிப்பிற்கு பதில் மடல் எழுதாமல் போன விஷயத்தைப் பற்றி. என்னைப் பற்றி கொஞ்சம் தெரிந்தவர்களுக்குக் கூட அது ஆச்சர்யமான விஷயமாக இருக்கலாம். பின்னர் என் ignorance ன் விளிம்பில் ஆசிப் இருந்தார். ஆனால் சத்தமில்லாமல் நீண்ட உறக்கத்தில் இருந்த மரத்தடிக் கதவை அப்பொழுதெல்லாம் கதையெழுதி தட்டிக் கொண்டிருப்பதுண்டு. ஆனால் கதவு திறந்த கதைகிடையாது. கதைவைத் திறக்க சில சமயம் ஹைக்கூ எல்லாம் கூட எழுதியிருக்கிறேன். :) அப்படி ஒரு கதவு தட்டலில் ஆசிப்பின் பதில் வந்தது. என்னைப் போல் உங்கள் கதைகளை இன்னும் நிறைய பேர் தொடர்ந்து கொண்டிருப்பார்கள் கவலைப்படாமல் எழுதுங்கள் என்று.
எனக்கு உண்மையில் ஆசிப் கவனித்தாரா? மற்றவர்கள் கவனித்தார்களா என்ற கவலை இப்பொழுது இல்லை ஆனால் அது தந்த உற்சாகம் மெல்ல ஒழிந்து கொண்டிருந்த மரத்தடியில் இருந்து நான் வெளியேறி பதிவுகளில் கால் பதிக்க உதவியது. இதைப் பற்றி நான் இதற்கு முன் எழுதிய நினைவில்லை, எழுதாமல் விட்டதனால் உண்மையில்லை என்ற அர்த்தமும் இல்லை. பின்னர் நாங்கள் பதிவுகளில் அடித்த லூட்டி சாட்டிங்கில் பேசிக்கொண்ட அரசியல்கள் நேரில் சந்தித்துப் பேசிய விஷயங்கள் என நாங்கள் நண்பர்கள். ஒருவாறு என்னை என் பைத்தியக்காரத்தனங்களுடன் ஒப்புக்கொண்ட நல்ல நண்பர் ஆசிப். அவருடைய நகைச்சுவை உணர்வைப்பற்றியும் மற்றவர்களை அரவணைத்துச் செல்லும் பழக்கம் பற்றியும் நான் சொல்ல ஒன்றும் புதிதாக ஒன்றும் இல்லை. இந்த micro blogging காலத்திலும் ஒரு குழுமத்தை அதுவும் வெற்றிகரமாக நடத்தி வருவது அத்தனை சுலபமானது கிடையாது தான். பண்புடன் குழுமம் இன்னும் செழிக்க வேண்டுமென்றும் என்னைப் போன்ற இன்னும் பலரை ஆசிப்பும் பண்புடன் குழுமமும் வெளிக்கொண்டு வரும் என்றும் முழு மனதாக விரும்புகிறேன்.
நான் செப்புப்பட்டயம் என்ற பதிவொன்றில் தொடர்ச்சியாக எழுதிவருகிறேன். உலக சினிமா, தமிழ் இலக்கியம், நாவல் சிறுகதை ஆகியவற்றில் விருப்பம் உண்டு. ஒரு வாரத்திற்கு எழுதித் தரச்சொல்லிக் கேட்டிருக்கிறார். நிச்சயம் என்னால் முடிந்த அளவிற்குச் செய்கிறேன் என்று சொல்லியிருக்கிறேன்.
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : அறிமுகம், வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - சுரேஷ் கண்ணன் - அறிமுகம்
சுரேஷ் கண்ணன் - அறிமுகம்
வணக்கம் நண்பர்களே
ஆண்டு விழாக் கொண்டாட்டத்தை குதூகலத்துடன் கொண்டாடிக் கொண்டிருக்கும் 'பண்புடன்' குழுமத்தின் உறுப்பினர்களுக்கு வணக்கம். வலைப்பூக்கள் பெருகி விட்ட இன்றைய நிலையில் பல்வேறு அலைவரிசையில் உள்ள உறுப்பினர்களை ஒருங்கிணைத்து குழுமங்களை தொடர்ந்து நடத்துவது என்பது மிகச் சிரமமான விஷயம். அதிலும் நண்பர் ஆசிப் மீரானை வைத்துக் கொண்டு ஒரு குழுமம் ஒரு வருடத்தை நிறைவு செய்திருக்கிறது என்பது நிச்சயம் ஒரு சாதனைதான்.
வேறு வழியில்லை. ஆசிப்பை நண்பர் என்றுதான் அழைக்க வேண்டியிருக்கிறது. நண்பர் என்கிற சொல்லின் நேரடி அர்த்தம் எடுத்துக் கொள்ள வேண்டாம். 'எதிரிக்கு எதிரி நண்பன்' என்றொரு saying உண்டு. அந்த வகையில் அவர் எனக்கு நண்பர். 'எனக்குப் பிடிக்காதவைகள்' என்றொரு பட்டியலிட்டால் கவிதை என்கிற வஸ்துவிற்கு நிச்சயம் அதில் பிரதான இடமுண்டு. கவிதை எனக்கு எதிரி அல்லது கவிதைக்கு நான் எதிரி. ஆசிப்பும் 'கவுஜை'க்கு எதிரி என்று அறிகிறேன். எனவே...
நான் சுரேஷ் கண்ணன். ராயர் காப்பி கிளப் குழுமத்தின் மூலம் இணையத்தில் நுழைந்தேன். பின்னர் மரத்தடி. அங்குதான் ஆசிப் என்கிற சாத்தானின் நட்பு ஏற்பட்டது. (இந்த வகையில் மரத்தடியும் என்னுடைய எதிரிதான்). மிகவும் சம்பிரதாயமாக தொடங்கிய நட்பு இரண்டு பேர்களின் லொள்ளுத்தன்மை காரணமாக சற்று இறுக்கமடைந்தது. எனக்கு ஆசிப்பிடம் மிகவும் கவர்ந்தது அவருடைய பிரத்யேகமான நகைச்சுவை. அமீரக ஆண்டுவிழா மலரில் பிரசுரமான ஒரு புகைப்படத்திற்கு அவர் சொன்ன ஒரு பின்னணிக்கதையை இப்போது நினைத்தாலும் சிரிப்பு பீறிட்டுக் கொண்டு வரும். ஆனால் இந்த நகைச்சுவையே சற்று அதீதமாக போய்விடும் சமயங்களில் இடைவெளி ஏற்பட்டதுண்டு. அந்த இடைவெளியை மீண்டும் நிரப்பியதும் அதே நகைச்சுவைதான் என்பதொரு நகைமுரண். நகைச்சுவையைத் தாண்டியும் தீவிரமானதொரு சிந்தனைகளைக் கொண்டவர் ஆசிப் என்பது தெரியும். எனவே அந்தப் பக்கத்தை அவர் நிறைய காண்பிக்க வேண்டும் என்பது என் ஆசை. (வில்லங்கமாக ஏதும் பொருள் வரவில்லையே?)
()
www.pitchaipathriram.blogspot.com என்கிற வலைப்பூவில் 2004 முதல் எழுதி வருகிறேன். தமிழ் நவீன இலக்கியத்திலும் உலக சினிமாவிலும் ஆர்வமுண்டு. வேறெதுவும் சொல்ல இருப்பதாக தோன்றவில்லை. அவ்வளவுதான்.
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : அறிமுகம், வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - கூத்தலிங்கம் - அறிமுகம்
கூத்தலிங்கம் - அறிமுகம்
குழந்தைகளுக்கு கதைச்சொல்லல் என்கிற நிகழ்வுக்காக தமிழகம் முழுவதும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளிடம் உள்ள படைப்பாற்றலை வளர்க்கும் விதமாக பங்காற்றியவர். குழந்தைகளுக்கான அயல் தேசத்து நாட்டுப்புற கதைகள் மொழிபெயர்த்து புத்தகமாக வெளி வந்திருக்கிறது. புதிய பார்வை இதழின் இணையாசிரியராக பங்காற்றியவர். இலக்கிய உலகில் சிறுகதை, கவிதைகள், மொழிபெயர்ப்பு சிறுகதைகள் என பல முகங்களின் சொந்தக்காரர்.
தற்போது குமுதம் நிறுவனத்தின் தொலைக்காட்சி ஊடகத்தில் பணியாற்றி வருபவர்.
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : அறிமுகம், சிறப்பு விருந்தினர்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஜமாலன் - அறிமுகம்
ஜமாலன் - அறிமுகம்
ஜமாலன் புனைபெயர்தான். இயற்பெயர் ஜாகிர் உசேன். சொந்தஊர் குடந்தை அருகில் உள்ள திருநாகேஸ்வரம் என்கிற பேரூராட்சி. படித்தது முது அறிவியல் இயற்பியல் (M.Sc. Physics). காதலித்தது இயற்பியலை, கட்டிக்கொண்டது கணிப்பொறியை, எப்பொழுதும் கள்ளக்காதல் இலக்கியத்துடன்தான். விஞ்ஞானி ஆகவேண்டும் என்பதுதான் கனவு, மெய்ப்பட்டதோ கணிப்பொறி குமாஸ்தா? அதுவும் அரேபியா எனும் அந்நிய மண்ணில். அரேபியாவில் தோல்வியான 16-வது ஆண்டு. 10-ஆண்டுகள் "தனிமையின் இசை", துணையற்ற உடல் வாதைகள் எழுத்துக்களாய் கொப்பளித்த காலங்கள். கடந்த 6-ஆண்டுகளாக குடும்பத்துடன் கும்மிதான், உப்பு, பருப்பு என. கஷ்டப்பட்டும் உழைக்கவில்லை, இஷ்டப்பட்டும் உழைக்கவில்லை, வாழ்க்கையை நஷ்டப்பட்டுதான் உழைக்கிறேன். சொல்வதற்கு ஒன்றுமில்லை, சுவாசிக்கிறேன் என்பதைத்தவிர, யாரோ எழுதிய கவிதை வரிகள்.
80-களுக்குப் பிறகான சிறுபத்திரிக்கை உலகுடன் தொடர்பு. நடத்திய பத்திரிக்கைகள் 9-ஆம் வகுப்பில் தேனி கையெழுத்துப் பத்திரிக்கை - சக ஆசிரியை காதலியனாதால் 2-வது இதழில் நின்றுபோனது, +2ல் திசைகள் கையெழுத்துப்பத்திரிக்கை, கல்லூரி முதலாம் ஆண்டில் ஜனகனமன உருட்டச்சிதழ், 2-ஆம் ஆண்டில் விடிவு அச்சிதழ், காதலிக்கு கல்யாணகுமார் பாணியில் அச்சதைப்போட்டுவிட்டு, தாடி வளர்த்து, வேறொரு பெண்ணை காதிலித்து கல்யாணம் செய்து கொண்டு சவுதி வந்த பிறகு காலக்குறியில் தொடர்ந்து எழுத்துப்பணி. அவ்வப்போது எழுதிய கட்டுரைகளை தொகுத்து நண்பன் காலக்குறி ஆசிரியர் கான் தொகுத்து "மொழியும் நிலமும்" என்கிற நூலாக 2003-ல் வெளியிட்டான். மார்க்சிய அரசியலில் நம்பிக்கை உண்டு. புதிய சிந்தனைத் துறைகளான பின்காலனீயம், அமைப்பியல், பின்-அமைப்பியல் மற்றும் பின்-நவீனத்தும் ஆகியவற்றை குறித்த படிப்பும் அறிந்து கொள்வதற்கான ஆர்வமும். அவற்றை மார்க்சீய எல்லைக்குள் கொண்டுவந்து புரிந்துகொள்ள முயல்வதும். இந்திய தத்துவஞானத்தில் ஈடுபாடு உண்டு. எதிர்காலத் திட்டம் உடலரசியல் குறித்த ஒரு முழுமையான நூல் எழுதுவது.
என்னைக்குறித்து நானே சொல்வது என்பது என்னைக்குறித்து பிறர் என்ன எண்ண வேண்டும் என்கிற வேட்கையின் வெளிப்பாடே. ஆக, இவ்வறிமுகம் என்னைப் பற்றியதல்ல, என்னைப்பற்றி நீங்கள் என்ன நினைக்க வேண்டும் என்கிற எனது ஆசையே. ஏனென்றால் சுயம் என்று ஒன்று இல்லை. சுயம் என்பது பிறறால் அல்லது மற்றமையால் கட்டப்படுவதால், எனது சுயம் என்பது மற்றமையான உங்களால் கட்டமைக்கப்படுவதே. அத்தகைய முயற்சியே இவ்வறிமுகம்.
பொதுவாக, வாசகர்களைக் கவரக்கூடியதல்ல எனது எழுத்துமுறை என்றாலும் ஒருசிலரது வாசிப்பையாவது இவை பெறுவது மகிழ்ச்சியளிக்கிறது
பதிவு செய்தது : பண்புடன் at 1 பின்னூட்டங்கள்
பதிவு வகை : அறிமுகம், வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - வா.மு.கோமு - அறிமுகம்
வா.மு.கோமு என்கிற பெயரில் எழுதிவரும் வா.மு.கோமகன் ஈரோடு மாவட்டத்தில் விஜய மங்கலத்திற்கு அருகாமையிலிருக்கும் வாய்ப்பாடி என்கிற குக்கிராமத்தில் 1969ல் பிறந்தவர். 90களின் ஆரம்பத்தில் நடுகல் என்கிற சிற்றிதழை நடத்தியவர். தற்போது ராசமைந்தன் என்கிற புனைபெயரில் இறக்கை என்கிற இருமாத இதழை நடத்திவருகிறார். பல்வேறு சிற்றிதழ்களில் பல தரப்பட்ட சிறுகதைகளை 90களின் ஆரம்பத்தில் இருந்து இன்று வரை எழுதி வருகிறார். கடந்த ஆண்டு, அழுவாச்சி வருதுங்சாமி என்கிற சிறுகதை தொகுப்பும், உயிர்மை பதிப்பக வெளியீடாக மண்பூதம் என்கிற சிறுகதை தொகுப்பும் வெளிவந்து பரவலான கவனம் பெற்றது. கள்ளி இவருடைய முதல் நாவல், 2008-ல் அருக்காணிக்கு சொந்த ஊர் விஜயமங்கலம் அகரம் வெளியீடு.2008 ஜூன்ல் தவளைகள் குதிக்கும் வயிறு உயிர் எழுத்து வெளியிடு.வர இருப்பவை
கூப்பிடுவது எமனாகவும் இருக்கலாம் ( நாவல்),
இறக்கை எங்கு வேண்டுமானாலும் பறக்கலாம் ( இதழ் தொகுதி)
மற்றும் கவிதை தொகுதி ஒன்று
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : அறிமுகம், சிறப்பு விருந்தினர்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - ஹரன் பிரசன்னா - அறிமுகம்
ஹரன் பிரசன்னா - அறிமுகம்
தீவிர எழுத்தை நேசிப்பவர்களுக்கு இவ்வார நட்சத்திரமான ஹரன் பிரசன்னாவை தனியாக அறிமுகப்படுத்த அவசியமில்லை.
தனது மொழியாளுமையால் சிறப்பான கவிதைகளைப் படைத்துவரும் ஹரன் பிரசன்னாவின் படைப்புகள் நல்ல வாசிப்பை விரும்புகிறவர்களுக்கானவை.
சிறுகதை, குறுநாவல் (பண்புடன் குழுமத்துக்காக பிரசன்னா எழுதிய குறுநாவலை நினனவில் கொள்க!) கட்டுரைகள் என்று பல தளங்களிலும் இயங்கும் பிரசன்னா மரத்தடி மின்குழுமத்தை நிர்வகிக்கும் மட்டுறுத்துனரும் கூட.
வார்த்தை சிற்றிலக்கிய இதழின் ஆசிரியர் குழுவில் பங்களிப்பினைச் செய்து வந்த பிரசன்னா இப்போதும் எல்லா சிற்றிதழ்களிலும் தொடர்ந்து எழுதி வருகிறார். தற்போது சென்னையில் மகனோடும் மனைவியோடும் வசிக்கும் பிரசன்னா கிழக்கு பதிப்பகத்தில்
நேரடி விற்பனை மேலாளராகப் பணியாற்றி வருகிறார்.
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : அறிமுகம், வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - நாக. இளங்கோவன் அறிமுகம்
நாக. இளங்கோவன் - அறிமுகம்
தமிழில் கலப்பின்றி பேசுவதும் எழுதுவதும் கூட கிண்டலாகிப் போன இன்றைய தமிழ்ச்சூழலில் தனித்தமிழின் அவசியம் மற்றும் தனித்தமிழின் சிறப்பு பற்றி சிந்திக்கவும் அது தொடர்பான கருத்தியல்களைத் தொடர்ந்து மன ஊக்கத்தோடு வெளிப்படுத்தவும் தமிழ் மொழி மீது தீராத காதல் கொண்டிருக்க வேண்டியது இன்றியமையாத குணநலனாகும்.
அத்தகைய குணநலன் கொண்ட தனித் தமிழார்வலரும் மரபுக் கவிதைகளில் ஆர்வம் கொண்டவருமான நாக.இளங்கோவனை இவ்வார நட்சத்திரமாக அறிமுகப்படுத்துவதில் பண்புடன் பெருமை கொள்கிறது.
ஆரம்ப காலத்திலிருந்தே இணையத்தில் தனித்தமிழ்குறித்து எழுதி வரும் இவர், சென்னையில் இணையம் சார்ந்து செயல்படும் 'தமிழம்' என்ற அமைப்பு உருவாகவும், தருமபுரி மாணவியர் எரித்துக் கொல்லப்பட்ட சமயத்தில் அவர்களுக்காக தமிழ் இணைய அன்பர்கள் வழங்கிய நன்கொடையை நெறிப்படுத்தி இறந்த மாணவியர் பெயரில் கோவை வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் நினைவுத்தொகை உருவாக்கப்பட சிறப்பாகப் பணியாற்றியவர்.
நயனம் என்ற வலைப்பூ தொடங்கி அதில் தமிழ் சார்ந்த சிந்தனைகளையும் தமிழக அரசியல் குறித்த தனது உறுதியான நிலைப்பாடுகளையும் தெளிவாக எழுதி வரும் இளங்கோவன் சிலப்பதிகாரத்தை அழகு தமிழில் 'சிலம்பு மடல்கள்' என்ற பெயரில் ஆரம்பத்தில் தமிழ் இணையத்தில் தொடராகவும் பின்னர் அதனையே அச்சில் புத்தகமாகவும் கொண்டு வந்தார்.
சென்னையைச் சேர்ந்த இளங்கோவன் தற்போது சவுதி அரேபியத் தலைநகரான இரியாதில் பணியாற்றி வருகிறார்.
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : அறிமுகம், வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - கானா பிரபா - அறிமுகம்
கானா பிரபா
வானலைகளில் தமிழின் வசந்தங்களைச் சொல்லும் வானொலிக் கலைஞர்
தமிழ் வலைப்பதிவுலகின் முக்கிய பங்காளிகள் ஒருவரான கானா பிரபா புலம்
பெயர்ந்து வாழும் ஈழத்தமிழர். அவரது ஏக்கங்களைச் சொன்ன தீபாவளி கட்டுரை
ஏற்கெனவே நமது குழுமத்தில் தீபாவளி சிறப்பு கட்டுரையாக இடம் பிடித்திருந்தது
நினைவிருக்கும் உங்களுக்கு
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் கானா பிரபாவின் இவ்வாரப்பதிவுகள் ஒரு வானொலிக்
கலைஞனாக அவரை முன்னிறுத்துபவை.
வித்தியாசமான படைப்புகளை வாசிக்க நேசம் கொண்ட பண்புடன் குழும உறுப்பினர்கள்
நிறைய ஒலிபதிவுகளைக் கொண்ட இவரது படைப்புகளையும் கேட்டு மகிழ்வீர்கள் என நம்புகிறோம்
********************************
கடந்த மூன்று ஆண்டுகளாக வலைப்பதிவுலக அறிமுகம் ஊடாக என் பதிவுகளைத் தொடர்ந்து படைத்து வருகின்றேன். என் தாயக வாழ்வியலின் நனவிடை தோய்தல் வழியே அந்த அனுபவங்கள், நிகழ்வுகள், என்னைப் பாதித்த திரைப்படங்கள், இலக்கியங்கள், மனிதர்கள், பயண உலாத்தல்கள் என்றும் இன்னொரு புறம் என் புலம்பெயர் வாழ்வின் தனிமையைத் துடைத்தெறிந்து உற்ற தோழனாகி இன்று வரை என் மூச்சாய் இருக்கும் இசையை நேசிக்கும் பதிவுகள், பேட்டிகள், பின்னணி இசைத் தொகுப்புக்கள் வழி திரையிசையின் இன்னொரு பரிமாணத்தை அனுபவித்துப் பகிர்தல் என்று என் பதிவுகள் தொடர்கின்றன.
எதையும் எழுத முன்னர் யாரை இது சென்றடையவேண்டும், இதற்கான அளவுகோல் என்ன என்றெல்லாம் பார்த்து என் பதிவுகளை நான் படைப்பதில்லை. ஆனால் வலையுலகம் வழி ஒத்த சிந்தனையோட்டம் கொண்ட பலர் என் பதிவுகளை வாசிப்பதோடு அரிய பல தகவல்களையும் பகிர்வது என் முயற்சிக்குக் கிடைத்த வெற்றியாகவும், நிறைவாகவும் எண்ணுகின்றேன்.
பண்புடன் குழுமத்தில் இணைந்து பெரிதாக என்னால் எதுவும் பகிரமுடியாவிட்டாலும், இந்தக் குழுமத்தில் சக படைப்பாளிகள் வழங்கும் படைப்புக்களையும், அவற்றுக்கான கருத்துக்களையும் நான் விடுவதேயில்லை. இந்த பண்புடன் ஆண்டு விழாவில் என் பதிவுகளையும் இணைக்கவேண்டும் என்ற அன்புக் கட்டளை இட்ட நிர்வாகக் குழுமத்துக்கு என் பணிவான நன்றிகள்.
தொடர்ந்து இதுவரை நாள் நான் எழுதியவற்றில் தேர்ந்தெடுத்த சில பதிவுகளை உங்கள் முன் பகிர்கின்றேன்.
அன்புடன்
கானா பிரபா
--
பண்புடன் - ஆண்டு விழா குழுவினர்
"இணையப் பெருவெளியில் இன்பத் தமிழ்"
முதலாமாண்டு நிறைவு விழா
http://panbudan.blogspot.com/
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : அறிமுகம், வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - புதியமாதவி - அறிமுகம்
புதியமாதவி - அறிமுகம்
புதியமாதவியின் தன் குறிப்புகள்:
இயற்பெயர் : மல்லிகா
கல்வித்தகுதி : M.A. & PGDMC (post graduation diplomo in mass media communication) &
certificate course on feminism and social service
தாமிரபரணி தான் என் தாயகம் என்றாலும்
வாழ்விடமென்னவோ அரபிக்கடலோர மும்பைதான்.
மும்பை மண்ணுக்கு நான் நான்காவது தலைமுறை.
பணி செய்தது பன்னாட்டு வங்கியில். (HSBC-Mumbai)
22 ஆண்டுகளுக்குப் பின் விருப்ப ஓய்வு 2004 ஆம் ஆண்டுமுதல்.
நிழல்களைத் தேடி கவிதை நூலுக்கு 2006 ஆம் ஆண்டின் கவிதை நூலுக்கான
சிற்பி விருது.
மின்சாரவண்டிகள் குறுநாவலுக்கு தந்தை பெரியார் தமிழர் பேரவை விருது.
தமிழ்நேயம் -கோவை பெண் எழுத்தாளர்கள் சிறுகதைப் போட்டிகளிலும்
கலை இலக்கிய பெருமன்றம், சென்னை கவிதைப் போட்டியிலும்
பூவரசு இலக்கிய மன்றம், ஜெர்மனி க்விதைப் போட்டியிலும் படைப்புகள்
பரிசுக்குரியவைகளாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.
மாத்ருபூமி கவிதைகளை மலையாளத்தில் மொழியாக்கம் செய்துள்ளது.
மும்பை பல்கலை கழக ஜெர்மன் மொழித்துறை சில கவிதைகளை
ஜெர்மன் மொழியில் மொழியாக்கம் செய்துள்ளது.
மும்பை நகரக்கவிதா மண்டலத்தில் வெளியீடுகளில் கவிதைகள் மொழியாக்கம்
செய்யப்பட்டுள்ளன.
மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றத்தை நிறுவியதில் பெரும்பங்கும் நிர்வாகப்பொறுப்பும்-. PUKAR( partnership for urban development and research org), Mumbai sahitya adkademy நிகழ்ச்சிகளில் தமிழ் சமுதாய, இலக்கிய குரலாக தொடர்வது.-. ஆதிதிராவிடர் சிந்தனையாளர் சபை, ஆதிதிராவிடர் பேரவையின் ஆலோசகராக ...
இதுவரை அச்சில் வெளிவந்துள்ள நூல்கள்:
- சூரிய பயணம் - கவிதை நூல் - ராஜா பதிப்பகம், முமபை ஆண்டு 2000
-ஹேராம் - கவிதை நூல் - (2003)- மராத்திய மாநில தமிழ் எழுத்தாளர் மன்றம் ஆண்டு 2003
-மின்சாரவண்டிகள் - சிறுகதைகள் - மருதா பதிப்பகம், சென்னை ஆண்டு 2005
-சிறகசைக்கும் கிளிக்கூண்டுகள் - கட்டுரைகள் - வள்ளிசுந்தர் பதிப்பகம் 2005
-நிழல்களைத் தேடி - கவிதைகள்- அன்னை இராஜேஸ்வரி பதிப்பகம் , சென்னை 2006
-புதிய ஆரம்பங்கள் - சிறுகதைகள் - மருதா பதிப்பகம், சென்னை 2007
-தனியறை - சிறுகதைகள் - மருதா பதிப்பகம், சென்னை 2007.
நட்புமண்டலம் - அச்சில்
அரபிக்கடலோரம் - அச்சில்
ஒரு சொல் தேடி - அச்சில்
முகவரி : FLAT 505, HEMA PARK TOWER
BHANDUP (EAST)
MUMBAI 400 042, MAHARASHTRA.
RES TEL: 022 25912414
CELL : 09969 647854
E-MAIL:: puthiyamaadhavi@hotmail.com
mallikasankaran@gmail.com
my blog: www.puthiyamaadhavi.blogspot.com
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : அறிமுகம், வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - மு. ஹரிகிருஷ்ணன்
மு.ஹரிகிருஷ்ணன் - அறிமுகம்
மின்னஞ்சல் முகவரி : manalveedu@gmail.com
ஹரி கிருஷ்ணன், சேலம் மாவட்டம், ஏர்வாடியைச்சேர்ந்தவர்.
மயில் ராவணன் சிறுகதைத்தொகுப்பின் ஆசிரியர், சிறந்த சிறுகதையாளர், இறக்கை சிற்றிதழின் இணையாசிரியராக பணியாற்றியவர், மணல் வீடு சிற்றிதழின் ஆசிரியர், கூத்துக்கலைக்காக , கூத்துக்கலைஞர்களுக்கான உரிமைகளுக்காக தொடர்ச்சியாக குரலெழுப்பி வருபவர்.
நாயி வாயிச்சீல
- மு.ஹரி கிருஷ்ணன்
(அகாலமாக மரணத்தை தழுவிய அபிராமிக்கு இந்தக் கதை சமர்ப்பணம்)
தெரட்டி* முடிஞ்சதும் பொறப்படலாம்னா எங்க முடியிது? சொணையான* இன்னுமே வரிக்கல*. மணி பதனொன்னாவுதோ ! பன்னண்டாவுதோ தெரில. ஆட்டத்துக்கும் போயிக்கிட்டு அலங்காரத்துக்கும் போறதுன்னா சாமானியமா? கயிட்டத்தப்பாத்தா காச கண்ல காங்கிறத்தெப்பிடி? நாமக் கைத்தொட்ட காரியமாறதெப்பிடி?
எரநூறு வருதோ முன்னூறு வருதோ நாயனக்காரன இருந்து வாங்கியாடான்னு நாம்ப நம்ம தொந்தரவுக்கு போயிரலாந்தான். ஆனா இண்டம் புடிச்சவன் அதக்கொண்டி எங்கியாச்சும் கூத* கீதப்போட்டுக்கிட்டு வந்திட்டான்னா ஒரே ஒத்தப்பைசாவ திலுப்பி வாங்க முடியாது.
பொட்டைங்கன்னு* அவனுக்கு மட்டுமில்ல, இந்த வையகச்சனம் முச்சூட்டுமே எளக்காரந்தான்.பெறத்தியார ஏஞ்சொல்லனும்? பெத்தவெளே நம்ம தலமேல கொலாய வச்சித்தேக்கிறா. அபிராமி புள்ள இருந்தவரிக்கும் ஓரேடத்துக்குப் போவ வர பேசப்புடிக்க பக்கத்தொணையாயிருந்தா அவளத்தான் அனாமுத்தா மண்ணுக்கு வாரிக்கொடுத்திட்டமே.
பொம்பளயா பொறக்க வேண்டியவ ஆம்பிளயா பொறந்த அவ அடைஞ்ச சிறும கொஞ்சமா? நஞ்சமா?பொன்ன உருக்கி பூமில வாத்தாப்பிடி , தங்கத்தை உருக்கி தரையில வாத்தாப்பிடி! தகதகன்னு ஆளும் அவ அழவும் பிள்ளய பாத்தா கண்லு பசியாறும். பாதியில போறதுக்குதாம் பாவிமுண்ட அப்பிடியிருந்தாளோ என்னம்மோ!
சாவுற வயசா சண்டாளிக்கி?
ஆடிக்காத்துல பூளப்பூவு பறக்குமே அப்பிடி ஓடி ஓடிச் சம்பாரிச்ச சொத்தும் அவளக்காப்பாத்துல , பிருசனே இவந்தான்னு நம்பி பூசப்போட்டு கும்பிட்டுக்கிட்டிருந்தாளே தேவூரு கவுண்டம் மவன்! அவனும் அவளக் காப்பாத்தல. ஒக்கிலிப்பட்டி சாமியாருக்கிட்டதான்* நானும் அவளும் கூத்துப் படிச்சம். கூத்துப்படிச்சமில்ல அதுக்கு மிந்தியே அபிராமி தாயம்மாளிண்ட* கைப்போட்டு* பச்சச்சீலக்கட்டி போத்திராசி* மாதாளுக்குப் பாலுக்கொடம் எடுத்துப்பிட்டு வந்திட்டா.
பாலுக்கொடம் எடுத்தாளில்ல, அந்த ஒரு மண்டலமும் நாப்பத்தியெட்டு நாளும் அவப்பட்ட வாதயச் சொன்னா கல்லுங்கரையும் , மண்ணும் உருகும்.
அப்பன், ஆயா, பெத்து, பொறப்பு அத்தனப் பேத்துக்கும் விரோதமாகி, அடிப்பட்டு,துணிப்பொறுக்கி, அனாதியாட்டம் ஊட்டவுட்டு பம்பாயிக்கி ஓடி, பூக்கார ஆயா சாமாத்துல * சேந்து, பைட்டேண்டுக்கு பைட்டேண்டு, வீதிக்கு வீதி , சந்துக்கு சந்து,அல்லெடுத்து அங்கேயிருக்கிற பொட்டைங்களுக்கு அல்லாம் ஒரு வருசம், ஆறு மாசம் ராத்திரிப் பகலா ஊழியஞ் செஞ்சா.
ஊழியஞ்செஞ்சவளுக்கு கைப்போட்டுத் துப்பரவு பண்டறமின்னுச் சொன்னவிங்க பேச்சு சுத்தமா இருக்கனுமா வேண்டாமா?
இன்னைக்கி, நாளக்கின்னு சாக்குப்போக்கு சொல்றாங்களே தவிர ஒவ்வொரு தாயம்மாக்கூட இவளுக்கு கைபோடற மாதரயில்ல. வாக்கியங்கெட்ட கழுதைங்களப் போக்குல வுட்டுப் புடிக்கிலாமுன்னு இவளிருக்க, மறுபடியொமொரு மூணுமாசம் இழுத்தடிச்சி, அதும் பொறவு வடக்க வேண்டாந் தெக்க போலாமின்னு கூட்டிக்கிட்டு வந்தவிங்க ஒரு மாசஞ் சும்மாவே குந்த வெச்சிருந்தாங்க.
குந்த வெச்சிருக்கும்பிடி இவ பொறுக்க மாண்டாம,
கோத்தியாவே* திரிய இன்னும்மேயெனக்கு விதியா? முடியுமின்னா முடியுமின்னுச் சொல்லுங்க. இல்ல முடியிலியா பம்பாயிக்கு தாட்டி விடுங்க வழுது சாமத்த அண்டி எனக்கானத நானேப் பாத்திக்கறேன்னு கேக்க, கேட்டவளுக்கு "ஊக்கியில குத்தி இடுக்கியில முள்ளு எடுக்கிற சங்கதியா இது? கைப்போட்டு பொம்பளயாறதுன்னு உனக்கு அவ்ள ரேசா? அதுக்கெல்லாஞ் செட்யானப்படிக்கி தெகிரியம் வேணும் , நீ செத்த பொறுமையா இருடி தாயி"ன்னு தேறுதல சொல்லி ஆத்தூருக்கு கூட்டிப்போயி அங்கியுமொரு அஞ்சாறு நாளாட்டம் வெச்சிருந்தாங்க. ஆறாம் நாளு நெறஞ்ச வெள்ளிக்கிழம அன்னக்கி அந்தியோட ஆயாமாருங்க* சேலாமாருங்க* எல்லாரும் ஒரேத்துருவா கடவீதிக்குப் போனாங்க.
போனவிங்க இன்னதுதானில்ல இஷ்டப்பட்ட திம்பண்டத்த நீயி திங்கிறமுட்டும் தின்னுடின்னு அபிராமிக்கு வாங்கி கொடுத்துத் திங்கடிச்சாங்க.
திங்கடிச்சிப்புட்டு அன்ன ராவு மொதாட்டஞ் சினிமாவுக்கும் கூப்பிட்டுப் போனாங்க. போயிட்டு வந்து , கண்ணாறத் தூங்கு மவளே ! இன்னைக்கு விடியறதுக்குள்ள உனுக்கு உறுதியா கைப்பொடறமின்னுச் சொன்னாங்க.சொன்னவங்க சொன்ன மாதிரி ரெண்டு மணி சுமாருக்கு இவளையெழுப்பிச் சுத்தப்பத்தம் பண்டி, சுனிக்கு சரட்லச்சுருக்கு வெச்சி, அதைச்சுத்தியும் வெள்ளத்துணி சுத்தி சுத்திவுட்டாங்க. சுத்திவுட்டவுங்க அதும்பொற வொரோ அரச்சணங்க் கூட தூங்கவேப்படாதுன்னு இவுளுக்குக் காவலிருந்தாங்க.
விடிகாலம் நாலு மணிக்கெல்லாம் பாத்துக்க, ச்சும்மா தட புடலா மாதாளுக்கு முப்பூசயாவுது. பூச ஆவதுக்குள்ளேயே சாமிக்கு மின்ன நெறம்மணம்மா இவள நிக்க வச்சாங்க.
நிக்க வெச்சதும் அந்தல்ல யிந்தல்ல திமறதுக்கில்லாம கையிரண்டையும் பிந்தாயம்மா* இறுக்கிப் புடிச்சிக்கிட்டா. அவ இறுக்கிப்புடிச்சதும் தலமசுத்த சுருட்டி வாயில துருத்தி, மனசார மாதாவ வருந்தடியம்மான்னுப்புட்டு , 'மாதா, மாதான்னு இவ வருந்த, வருந்த , கண்ணமூடி முழிக்கிறதுக்குள்ள மானியப்புடிச்சி பறக்குன்னு அறுத்துப்புட்டா இன்னொரு தாயம்மா. அப்பிடி அறுத்ததும் அடேயேங் கொண்டாலா! காலடியில உதிரம்போவுது தானா காவேரி ஆறாட்டம்.
செவுத்தச் சாத்தி ஒக்காரவெச்சி உதரத்த வழிச்சி, வழிச்சி இவ உச்சந்தல மொதக்கொண்டு உள்ளங்காலு ஒருக்கோடியா சொதம்பப் பூசிவுட்டா தாயம்மா.
தாயம்மா பூசப்பூச தம்பட ரத்தத்த தானே காங்கும் பிடி அபிராமி அடி அம்மான்னு மயக்கம் போட்டுட்டா. மயக்கம் போட்டவள கன்னங்கன்னமா அப்பி , அம்மான்னு சொல்லாதடி மாதான்னு சொல்லுடின்னா, அவ எருப்பு தாழமாண்டாம எரியிதே! எரியுதேன்னு தன்னப்பால பெணாத்தறா. தன்னப்பால பெணாத்தும்பிடி அந்த தாயம்மா நல்லெண்ணய கொதிக்கக் கொதிக்கக் காய வச்சி கைப்பொறுக்க கொண்டாந்து அந்த பச்சப்புண்ணு வாப்பாட்டச்சுத்தியும் பலாசனா ஊத்தியுட்டா.
ஊத்த ஊத்த வாட்டமா காட்டிக்கிட்டிருந்தவ ஒருச்சித்தய கழிச்சி ச்சுறு ச்சுறுன்னு நோவு திலும்பும்படி அந்நேரம் அய்யய்யோ எங்கடவுளேயேன்னு அந்த பிள்ள ஒரு கத்துதாங் கத்தினாப்பாரு ! கடகால் மட்டத்துலேயிருந்து அந்த கட்டடமே கிடுகிடுன்னு நடுங்குது!
அருவாளோ, கொடுவாளோ தப்பத்தவற நம்ப மேலுலப்பட்டு அதாலவொரு காயமாயிப் போச்சின்னா அதுக்கு எத்தன ஊசிப்போடறம்?எவ்ள மாத்தரத் திங்கறம்? கப்புப்போட்டு* சோக்கேத்தி* ஆத்துக்குப்போயி, தீர்த்தம் எடுத்தாந்து ஆலாத்திச்சுத்தி, மாதா மொகம் பாத்த பிற்பாடும் , ஆறாத ரணத்துக்கொரு மருந்துமில்ல மாயமுமில்ல.
வலின்னு வாயத்தொறந்துப் புட்டா, மோரியிலக்* குந்த வெச்சி ஒலத்தண்ணிய மூட்டு மூட்டு காவு* மேல அடிச்சி வுடறதோடச்சேரி! அத மீறனா வெத்தலயில நல்லெண்ணயத் தடவிப்பத்து போடறதோடச் சேரி!
ஓடம்போக்காக் கூடப்போயி பக்கதிலேயிருந்து இந்த பாதரவு எல்லாத்தையும் பாத்திக்கிட்டிருந்த எனக்கு, கைப்போட்டா , தாயம்மாக்கிட்டதான் கைப்போட்டுக்கினுமின்னுருந்த வைராக்கியம் எங்கப்போச்சின்னே தெரில.
அத இன்னக்கி நெனச்சாலும் கை காலு தொவண்டு, கிறுகிறுப்பு பதபதன்னு வந்திரும், காலோட தொறத் தொறன்னு மல்லும் முட்டிக்கும். அந்த பயத்திலியே நாங்கையும் போட்டுக்கல, கிய்யும் போட்டுக்கல. சொல்லப்புடிக்காம அபிராமிக்கு மின்ன திருட்டு வண்டியேறி ஊருக்கு வந்திட்டன்.
உதரக்கட்டு நிக்காம , காஞ்சப்புண்ணு பாதி , காயாத புண்ணு பாதின்னு அப்பிடியே கோமணத்து மேல கோமணங்கட்டி, கட கடயாப் பிச்சையெடுத்து, குருவுக்குப் பட்ட கடங்கட்டிப்புட்டு தாயிப்புள்ளயோட வந்து அவளும் எடஞ்சேந்தா. மரத்த வெட்டி ஆராச்சிம் மாருமேல சாச்சிப்பாங்களா? எதுக்குயிந்த சித்ரவத? எதனாலிந்த கந்தர கோலம்னு கேக்கிற சனத்துக்கு வதிலுஞ்சொல்ல முடில. ஆதியில பகவாம் படச்சபண்டம் அப்பிடியே இருந்து தொலையட்டுமின்னு இருந்தாலும் மூக்கு மேல பீயப்பினாப்போல இந்த அருகருப்ப வெச்சிக்கிட்டு திரிய முடியல.
பவானி குட்டமுனியப்பங் கோயிலுதான் நாம் பொறந்த ஊரு. யெங்கப்பம் பழனிச்சக்கிலிக்கிம், ங்காயா பச்சாயா சக்கிலிக்கிச்சிக்கும் நாம் பொறந்தது ஒரேப்பையன். எனக்கொரு பொறந்தவ , அவ பேரு அழிஞ்சிகண்ணி. பொறக்கும்போது உருப்படியாதாம் பொறந்தன், பத்து வயசாச்சோ இல்லியோ இந்தப்பித்து பிடிச்சிட்டிது.
கண்ணுக்கு மையெழுதி , மண்டயில பூவ சொருவி, கவுனு மாட்டி, கண்ணாடி மின்ன ஆட்டம் போட்டு, ஊட்ல பொம்பளச்சட்டியின்னு பேரடுத்து ஊருல பேரெடுத்து, கூலிநாலிக்கு போற எடத்திலேயும் பேரெடுத்து, கரும்பு வெட்டப்போனத்தாவுல காட்டுக்காரன் கையக்கால கட்டிப்போட்டு , கடவாயிக்கி கல்லையும் , நடுவாயிக்கி புழுலுயும் வெக்க, பத்துபேரு அதப்பாத்து சிரிச்சாங்களே அன்னிக்கி ங்கெக்கா பாவடயோட ஓடி பூதப்பாடி கல்பனா ஆயா* காலடியில விழுந்தவதான், திலும்பி வூட்டுக்குப்போகவேயில்ல. வவுத்துக்கு திங்கிற சோத்துக்கும், இடுப்புக்கு கட்ற துணிக்கும் வஞ்சன வெக்காம வளத்தனா ங்காயதான் எனக்கு பேரு வச்சா! மூக்கு குத்தியுட்டு 'தொளசி' ன்னு அவதான் பேரு வச்சா. தந்தாவும் * வேண்டாண்டி ஒரு கிந்தாவும் வேண்டாண்டி! அலேய் ஆதமுத்து முண்டைங்களா உருவா சம்பாரிக்கலாமின்னு பத்துப்பேரோட படுத்து நோவு கீவு வாங்கிட்டம்னா அந்த வெனய எங்கக்கொண்டுப் போயி தீக்கிறது?
ஆடுமாடுகளுக்குக்கூட ஆசுபத்திரி இருக்கிது, நாயிம் தம்புண்ணத்தானே நக்கி ஆத்திக்கிது.அதோட கேவலண்டி நம்ப பொழப்பு. கண்ணக்கெடுத்தாலுங்கோல குடுத்தாங்கிறப்பிடி மாதா நம்புளுக்கு ஒழச்சிப்பொழைக்க மாளாத தெம்பு குடுத்துக்கிறா. வாங்கடி கைய ஊனி கரணம் போடலாமின்னு அம்பது , நூறு பொட்டைங்கள ஒண்ணாச்சேத்திக்கிட்டுப் போயி கலைக்கிட்டருக்கிட்ட
"சாரு, சாரு இந்த மாதர , இந்த மாதர நாங்க சொந்தமா பாடுப்பட்டு தின்னுக்கிறம், எங்களுக்கு எதுனா ரோனு* கீனு ஏப்பாடு பண்டி விடுங்கன்னு" பிட்டிசனு எழுதிக்குடுத்தா, அவிங்க என்னங்கறாங்க.., ஊடு வாச இருக்குதா? உங்க பேருல சொத்துப் பத்து இருக்குதா? சர்க்காரு வேங்குல ரொக்கம் ரோஜனம், கணக்கு வழக்கு இருக்குதாங்கறாங்க.
உங்க சோறு இல்ல, ஒதுங்கவொரு நெவுலடி பாத்தியம் இல்ல, எங்ககிட்ட எதுவுமேயில்ல அத்தாந்தரமா* நிக்கறம். எதோ நீங்க பாத்துவொரு ஒத்தாசப் பண்டுங்கன்னு கெஞ்சினா, அட்ரசீ இல்லாதவங்களுக்கு ரோனு குடுக்க சட்டத்துல எடமில்லங்கறானுங்கவொரு தலயெடுப்பா.., போங்கடா எம்பட்டைங்களான்னு * திலும்பி வந்திட்டோம்.
ஆளாளுக்கு ஒரு தொழுவாடு கத்துக்கடிங்கன்னு ஆயா சாமியாருக்கிட்ட கூத்துப்படிக்க கைகாட்டியுட்டா. சும்மா எப்பிடி சொல்றது சாமியாரப்பன் வெட்டு வெடுக்குன்னு ஒரு வார்த்தப்பேசினதில்ல. பெத்தப்புள்ளங்களுக்கு மேல ஆச அம்பா வெச்சிருந்து அக்குசா தொழில கத்துக்குடுத்தாரு.
அபிராமி கண்ணாலந்தான்* மொதல்ல படிச்சம். அப்பதான் இவளுக்கு அபிராமின்னு பேரு வெளங்கனது.
செரியான வுனுப்புக்காரி , எதச்சொன்னாலும் புடிச்சாலும் கப்பூரமாட்டும், ஆட்டம் அப்பிடித்தான். பாட்டும் அப்பிடித்தான். என்னாவொண்ணு சாரீரம் மட்லுங்கொஞ்சங் கட்ட சாரீரம். நெட்டையோ , குட்டையோ சாமியாரு செட்டுக்கு, மொகாம , மெயினு வேசக்காரி இவதாங்கிறாப்பிடி ஆயிட்டா.
சரி சரீங்கறாப்பல தொழிலுஞ் செஞ்சா. நாத்து வெளஞ்சி பயிராவறதுக்குள்ள மத்தளக்காரம் பூமுடியூர் ராசி அவள குத்துவதோட்டம் ஓட்டறதுக்கு ஆரம்பிச்சிக்கிட்டான். வூடு வாச அண்டாம, செலவுக்கு அஞ்சிப்பத்து வரும்பிடிய குடுக்காம ஓராம்பள கண்டயெடம் மேஞ்சிக்கிட்டிருந்தா பொட்டப்பொம்பள பிள்ளைங்க குட்டிகள வெச்சிக்கிட்டு என்னாப் பண்டுவா? ஒண்டி ஒரியா அவளால சம்சாரத்த சுதாரிக்க முடியுமா? செட்டாளுங்க ஆளாளுக்கு கூடி கூடி நாயம்பேசி குசலஞ்சொல்லி அவளுக்கு உடுக்கயடிக்க.
"உன்னையொரு பெரிய மனுசன் , வாத்தியாருன்னு நம்பி செட்டு மத்தாளத்துக்கு வுட்டா, எம்பிருசனுக்கும் அந்தப்பொட்டையனுக்கும் வெளக்கு புடிச்சி, என்ற வேரப்பறிச்சி,வெந்தண்ணி வாக்கிற , பரவால்லடா மாப்ளே உன்ற பண்ணாட்டுன்னு" ராசுப்பொண்டாட்டி வந்து பேயாடிப்புட்டு போனா.
அல்லாருக்கும் எட்டெழுத்து, நம்புளுக்கு பத்தெழுத்துலே அலே பறமுண்ட! என்னா பாவம் பண்டினமோ ஆணுக்காவாம், பொண்ணுக்கும் ஆவாம, இந்த மானங்கெட்ட பொறப்பெடுத்து, போற வாரப்பக்கமெல்லாஞ் சின்னப்பட்டு சீரழியுறோம். ஒருக்குத்தமும் பண்டாதமின்னியே நம்பள தேவியாப்பட்டங்கட்டி பல்லுமேல நாக்குப்போட்டு மந்தைங்க பலவெதமாப் பேசுதுங்க. எச்செலைக்கி வீங்கறப்பொழப்ப இன்னையோட தல முழுவிடி ஆயான்னு உள்ள நாயத்த நானு எடுத்துச் சொல்ல , வாத்தியாரும் ரெண்டு நல்ல பித்தி சொன்னாரு.
சரீன்னு அபிராமியும் கம்மின்னிருந்தா ராசு வழிக்கிப் போகாம , ஆடி நோம்பிக்கிக் கூத்தாட தேவுரு செட்டிப்பட்டிக்கி போனாம்பாரு அங்கவொரு எத்துக்காரவன் வந்துச் சேந்தான் அவளுக்கு எமனா.
களரிக்கூட்டுமிந்தியே வந்தவம்பா! விடிய விடிய சுத்தி விடிஞ்சும் அபிராமிய வுட்டு அந்தல்ல நவுரல. இவ என்றான்ன அவஞ்சொல்ற பாட்ட பாடுறா, அந்த பாட்டுக்கு பதினஞ்சி சீல மாத்றா ச்சும்மா பறந்து பறந்து ஆடுறாப்பா. அந்த திருவாத்தான் ஆளுமேல ஆளவுட்டு இவளுக்கு நோட்டு நோட்டு பின்னுக்குத்தறாஞ் சலிக்காம, எப்பிடியும் அன்னைக்கி அனாமுத்தா சேந்தது உரூவா ஏழ்நூத்தம்பதுக்கு மேலியே இருக்கும்.
அலங்காரம் முடிஞ்சிதும் எங்கடா பிள்ளயின்னு தொழாவுனா ரெண்டுபேரும் எவத்தயிருக்காங்கன்னு ஒன்னுந்துப்பே இல்ல. அப்பறம் பாத்துக்க எந்த பிருசம் பொண்டாட்டி அந்த மாதர ஒத்துமையா இருப்பாங்க ! அவிங்க திங்கிறதும் ஒரே வட்டிலு , படுக்கிறதும் ஒரே கட்டிலு.., ஒண்ணும் மண்ணா பொழங்கிட்டிருந்தாங்க! நாளாவ ஆவ இந்தப்பிள்ளக்கி சுத்தமா நெப்புக்கெட்டுக்கிடுச்சி. மாப்ள பெரும கண்ண மூடிக்கிம்பிடி அஞ்சாறு அலங்காரத்துக்கு ஆளு வரல, கூத்து படு பாணி*
சாமியாரு கூப்புட்டு கண்டாற,கழுத,ங்கோயா, ங்கொம்மான்னு ரவுசுப்பண்டும் பிடி மாப்ளக்காரனுக்கு ச்செட்யான ரோசம் வந்துட்டது.
அவனப்பத்தி அனாவசியம்! அவனென்ன உன்ன அடிப்புடிங்கிறது? நானாச்சி வா உனக்கு தனியா செட்டுக் கட்டித்தாரமின்னு. ஒரே ரெண்டு நாளயில ஆளுங்களுக்கு மூவாயிரம் நாலாயிரம் மிம்பணங்கொடுத்து சாமியாரு செட்டக்கலச்சி தனிச்செட்டு கட்டிக்குடுத்துட்டான்.
இந்த ஆடுகாலிப் போனவ, குருவுக்கிட்டவொரு வார்த்தச் சொல்லிப்புட்டு நல்ல வாக்குசம் வாங்கிட்டுப் போவப்புடாதா? போடா பிலாக்கப்பையான்னு போவக்குள்ள சாமியாரு குடுத்து வச்சிருந்த பொதுப்பணம் நாப்பதாயிரத்தையும் வாயிலப் போட்டுக்கிட்டுப் போயிட்டா. ஒரு கூத்தன்னைக்கி இந்த மனுசன் தண்ணிதாசனூர் அம்மங்கோயிலண்ட நின்னு,
" அடியே குருத்துரோகி ! எண்ணி வொரேவொரு வருசத்துக்குள்ள என்ற கும்பி பத்தறாப்பல பத்தியெரிஞ்சி போயிருவடின்னு" மண்ணவாரி வாரி தூத்தவாச்சொல்லுப் பலிச்சிட்டுது. அந்த ஆளிட்ட சாபனையோ! அடி நாளு தீவனையோ கவுண்டம்மவங்க கூட சோடிப் போட்டுக்கிட்டு அங்கயிங்க சுத்தி ஆட்டம் போட்டது பத்தாதுன்னு இந்த கடகெட்ட மூளி அவனக்கூட்டிக்கிட்டு வூட்டுக்கேப் போயி கும்மாளம் போடறதா?
அவிங்கம்மாக்காரி பாக்கிறவரிக்கும் பாத்துட்டு, 'எங்கித்தி பாமனையோ என்னு வவுத்துல வந்து பொறந்து இப்பிடி ஈனப்பானமில்லாம திரியற! நீதாம் புளுத்துச் சாவற! எங்கியாச்சும் கண்ணுக்கு மறப்பாப்போயி சாவு! இங்கேண்டி வூட்ட கந்தறப் பண்டற? கூடப்பொறந்த பொறப்பு ஒரு வயசிப்பிள்ள இருக்கற வூட்ல இந்த மாதர அக்குறும்புல அழியறீங்களே நல்லாயிருப்பீங்களா?நாசமுத்து வேசமாரி போவிங்களான்னு ச்சும்மா வுட்டு வணக்கு வணக்குன்னு வணக்கி , கடதாம்பு கட்டும்பிடி கவுண்டம் மவன் போக்குவரத்து அறுதியா நிறுத்திக்கிட்டான். இவ மாப்ள வந்து பாக்கறதல்லையின்னு அலைமோதி கெட்டலைஞ்சி சோறுதண்ணி கூட குடிக்காம கூத்துக்கு போறது, வந்து கூதப்போட்டுக்கிட்டு படுத்துக்கறது. பங்கினி மாசம் ச்செட்யானப்படிக்கி சீசனு! வருசக் கூத்தா வருது! வர்ற கூத்த வாண்டாங்கலாங்கமா?
போற இடத்திலேயெ தங்குமடம், போட்டுக் கூத்தாடிக்கிட்டு தப்படியா வூட்டுக்கு வந்து போயிக்கிட்டிருந்தா.
அந்தப் பிரகாரம் பூலாம்பட்டி சித்தூருல நோம்பிக்கூத்து வொண்ணு தானாவதி* மழைக்கி நிக்கிம்படி வூட்டுக்கு போகவலாம்னு வந்தவ நட்ட நடு தாவாரத்திலியே மாப்ளக்காரனும் அவ அம்மாக்காரியுங் கொண்டி மாட்டிக்கிட்டு கெடக்கறதப் பாத்துருக்கறா.
அப்பிடியே அங்கம் பதற, அடி வவுறுக்காந்த ச்சட்டங்குன்ன , ச்சரிகலம் பதற நடுநடுங்க நின்னவ , " அடியே உத்தமபத்தினி எனக்கு பித்திச் சொன்னியே இப்ப நீயேண்டி அவுசேரிப் போன" ன்னு ஒரேயொரு வார்த்தயின்னாலும் நாண்டுக்கிட்டுச் சாவும்பிடி கேட்டுப்புட்டு, கடகடன்னு கண்ணுத்தண்ணிய வுட்டுப்புட்டு அந்தாண்ட வந்துட்டா.
அவ்வளதான் மக்யாவது வாரமெல்லாம் பன்னிக்கறிய வறுத்து அதல பாசானத்த கலந்துக் குடுத்து அபிராமிய கொன்னுப்புட்டா அவிங்கம்மாக்காரி.
நெருப்பூரு நாவமரைக்கி சீருக்குப் போயிட்டு தகோலு தெரிஞ்சி வரதுக்குள்ள எடுத்துக்கொண்டி எரிச்சுப்புட்டாங்க, எளம்பிள்ளி கூடுகாட்ல மவ மூஞ்சியப்பாக்க கூட ரொணமில்ல . ஆவுசந் தாங்காம குழிமேட்டுக்குப் போயி சாம்பல நவ்வாலு வாயி அள்ளித் தின்னுப்புட்டு வந்தம்.
நாங்க ஆருக்கு என்னா தீம்புச் செஞ்சம்?
தாயப் பழிச்சமா? தண்ணியத் தடுத்தமா? ஏழய அடிச்சமா? எளஞ்சாதம் உண்டமா? எனத்துக்கிந்த ஆண்டவனுக்கு எங்கமேல இத்தன கூரியம்? கூனுக்குருடு , மொண்டி , மொடம், இப்பிடி ஒடம்புலவொரு ஒச்சமின்னாக்கூட மயிராச்சி, அதப்பத்தி காரியமில்ல. பாழாப்போன பொறப்புல கோளாறுபண்டி வேடிக்கப் பாக்குதேயந்த நொள்ளக்கண்ணு சாமி !
அபிராமிபுள்ளய நெனச்சிட்டம்னா அன்ன பொழுதுக்கும் அன்னந்தண்ணி ஆகாரம் எதுவுமே உள்ற எறங்காது. நாம்ப அழுதகண்ணுஞ் சிந்தன மூக்குமாயிருந்தா மாண்டவிங்க பொழைக்கப் போறாங்களா? மறிச்சி மண்ணவுட்டு மேல வரப்போறாங்களா ? இல்ல அன்னைகியெழுதன எழுத்த பிரம்மன் அழிச்சி எழுதப்போறானா?
உச்சியத்தாண்டி ஒருமாறுப் பொழுதாச்சி சம்பளம் பிரிக்க. செங்கமா முனியப்பங் கோயில்ல எறங்கி பொடு பொடுன்னு வூட்டுக்கு போயி, துணிமணிய அலசிப்போட்டுட்டு ஒருவாச்சோத்த குடிச்சதும் களப்பாயிருக்குதேன்னு செத்த படுத்தம்பாரு , எந்திரிக்கும் போது மணி ஏழு!
எஸ்.டூ.எ பஸ்சு சங்கிரி வந்துட்டு திலும்பி பவானி போயிரிச்சு. அதும்பொறவு ஆதியா பாதியா கெளம்பி அம்மாபேட்ட வாரதுக்குள்ள மணி ஒம்போதர, அலங்கார கறவதானுங்க* ஒருத்தங்கூட வூட்ல இல்ல. எட்டு மணி முட்டும் பாத்துட்டு மினி வண்டி பேசி எடுத்துக்கிட்டுப் போயிட்டாங்களாம். வூடு வூடா அவிங்களத் தொழாவிப் புட்டு வரதுக்குள்ள பத்துமணி கடைசி பஸ்சும் போயிட்டுது.
பக்கமாயிருந்தாலுந் தேவல. நாகனூரு வாத்தியாரூட்டு கூத்து. மெயினு ரோட்லேயிருந்து பழையூரு. முழியனூரு மேல நடந்துப்போனா ஏழு மைலுக்கும் மேல சேரும். எந்நேரம் போறது? நேரங்காலமா வந்திருந்தா எதாவொரு வண்டி கிண்டி புடிச்சிப்போயிருக்கலாம். அத்துவானத்துல* வந்து மாட்டிக்கிட்டமே என்னாப் பண்டறது?
செட்ல சாரி வேசமே* இல்ல. அந்த சிறுத்த கண்ணஞ் சேவுருப்பையன் இப்பதான் புதுப்பழக்கம், சந்து அடைக்கத் தானாவும் , பெருங்கொண்ட ஆக்கிட்டு கட்டிச்செலுத்த மாண்டான்.
மிந்தியாச்சும் சுப்ரமணி இருந்தாப்ல,பொண்ணு வேசத்துக்கு பஞ்சமில்ல. போனப்பூட்டிலேயே ஆளு அலங்காரத்துக்கு வரல. அவரென்ணாப் பண்டுவாரு? பத்திருவது வருசமா செட்டுக்கு அவரு பட்ட பாடு அந்த பஞ்சும் பட்டிருக்காது. அப்பிடி ஒழைச்ச ஒழப்புக்கு கைமேல கண்ட பலனா இன்னிக்கி ஒவித்திரியப்பட்டிக்கிட்டுக் கெடக்கறாரு.
குஞ்சாண்டியூருக்கு அந்தாண்ட ஆண்டிக்கர காக்காயந்தெருவுக்கு ஓராட்டத்துப் போயிருந்தம். மூணாம் வருசம் கூம்புக்கு* கூத்துவிட்டவங்க வக்ரகேது பலிதான் ஆடனுமின்னுப்புட்டாங்க. எந்த அலங்காரமாயிருந்தாலுஞ்செரி சுப்ரமணி எத்து வரிசையாதான் தொழிலுப்பண்டுவாரு. அன்னைக்கிம் அவரு விலோச்சனா வேசம் போட்டுருந்தாரு.
அம்மாபேட்ட கணேசண்ணன் எரிகண்டங்கட்டியிருந்தாரு. வேகாத திரேகமும், போவாத உசுரும், நீங்காத சேம்பரமும் வேணுமின்னு வரம் வாங்க எரிகண்டன் வக்ரகேதுவ ரணகாளிக்கி பலி குடுக்க கூட்டிப்போறான், மவன் உசுர மாய்க்க வேண்டாமின்னு விலோச்சனா அழுது பொலம்பறா. மின்ன வச்ச கால பின்ன வெக்க மாண்டேன்னு சூரனொருபக்கம் இழுக்க, வுடமாட்டேன்னு பொண்டாட்டி குறுக்க விழுந்து தடுக்க, ஓரியாட்டத்தில சூர வேசக்காரன் அவள எட்டி ஒதச்சி தள்ளி அந்தாண்ட தாட்டி போவனில்ல, அந்த கட்டத்தல கணேசன் ஒதச்ச ஒதயில ஏமாந்தாப்பிடி அழுதுக்கிட்டிருந்த சுப்ரமணி முதுவுல ஈடுதாங்கி போச்சி. சும்மா ரெண்டு நாளு மூச்சுத்தப்பு உழுந்ததுதான் காரணம், பொறவு மனுசன் வாயத்தொறந்து பாட முடியல. எங்கியங்கியோ போயி அளவத்த பணம் செலவு பண்டியும் நோவு நல்லாவல. பொறிக்கித் திங்கிற கோழிக்கி மூக்கத் தறிச்சாப்ல . நல்ல தொழிலாளிக்கு நேந்த கதியப்பாரு. வவுத்துப் பாட்டுக்கு இப்ப ஊரு வூரா ஈயம் பூசிக்கிட்டு திரியறாரு.
அவருமில்ல, நானும் போவலைன்ன கனகராசி வாத்தியாரு கொஞ்சத்தப் பேச்சா பேசுவாரு. கெடயில காலு தங்காம அங்கயும் இங்கயும் ஏண்டா காலந்திரியா திரியற? செட்டுக்கே வந்துர்றா! ஆத்தர அவரசத்துக்கு வேணுமின்னா பணங் கிணம் வாங்கிக்குவியாம்னு அவருதாம் பொணையாயிருந்து ஆபரேசம் பண்ட செட்டு பணத்திலியிருந்து எட்டாயிரம் தாரமின்னு சொல்லி மிம்பணம் மூவாயிரத்த கையோட குடுத்தாரு.
ஆச்சி , ஆச்சி இந்த எட்டு பூர்த்தியா ஆடனா வேணுங்கற பணந்தெரண்டுக்கும், ராய வேலூருலியே டாக்கிட்ருமாருங்க கைபோடராங்களாம். நோவு இல்லாம போயி செஞ்சிக்கிட்டு வந்துர்லாம் நிம்மிதியா!
கல்பனா ஆயா கூட முடிஞ்சத தாரமின்னிருக்குது. எப்பிடி பாத்தாலும் போவ வர மேஞ்செலவு ஆயாப்பாத்துக்குவா. ஆசுபத்திரி சமாச்சாரம் செலவு இவ்ளவுதான் ஆவுமின்னு ஆரு கண்டது ? முன்ன பின்னக்கூட ஆவும். எதுக்கும் உண்டுன்னா காசிருந்தா ஒதாரணைக்கி ஆவுமின்னுதான் நானு கரவாட்டத்துக்கும் கூத்துக்குங் கைகுடுத்துட்டு இப்படி பட்டழியறன்.
கனகராசிச் சமாவையுஞ் சும்மாச் சொல்லக்கூடாது. மனசர காங்காம ஏவிடியம் பேசுவாங்களோ என்னமோ தெரியாது. கண்டவொரு நாளும் எச்சி எடுப்பு பேசனதில்ல. நாலுப்பேத்து தொழிலு நம்பளப் பத்தி வாதிக்கக்கூடாது. ரோட்டுக்கால்ல நின்னு பால மாதர பொந்தியப்போட்டு ஒழப்பிக்கிட்டு போறவர ஒண்ணுரெண்டு வண்டிங்கள நாங்குறுக்காட்ட ஒருத்தங்கூட நிக்கல.
நேரம் எந்நேரமோ அம்மாபேட்ட ஊரே அடங்கிப்போச்சி. வவுநேரங்கழிச்சி தொலையா ஆரோவொரு ஆளு வாட்டச்சாட்டமா நடமாடற மாதர தெம்பட்டது. ஆராயிருந்தா நமக்கென்னா? கூத்துக்கு போவ முடியாத வெசனத்துல எம்பாட்ல நானிருக்க, கிட்ட வரச்சொல்லி அவங்கைச்சாட பண்றானே! இதென்றா தும்பமின்னு பக்கம் போயிப்பாத்தா அவனெங்கியோவொரு போலிசு ஏட்டு.
சிப்பமோ* சீமச்சரக்கோ என்னான்னுந் தெரில. ஆளுக்குப் பதமான போத. சீப்பு வண்டிமேல அட்னகாலுப் போட்டு படுத்திக்கிட்டிருந்தாஞ் சிவரெட்டுப் பத்தவெச்சிக்கிட்டு
என்னாங்க கூப்ட்டதுன்னு நாங்கேக்க எடுத்த எடுப்பில " வர்றீயா" ங்கறானே ஒரு துடியா.
தடி எடுக்கறப்பவே அடி எங்க வுழுமின்னு எனக்கா தெரியாது.இருந்தாலும் நம்மள வெச்சி தெரிஞ்சி கூப்டறானா? தெரியாம கூப்டறானான்னு அறிக்கொழப்பம்! எப்பிடியோ இருந்து சாட்டாவுது, இதுக்கு மேல்பட்டு நாங்கூத்துக்குப் போறது நெசமில்ல. வளச்சிக்கிட்ட்டு வூட்டுக்குப் போவலாமின்னாலும் பவானி வரிக்கும் காரு இருக்கும். அந்தாண்ட வண்டியில்ல. பைபாஸ்ல போயி பொழுது விடியந்தின்னியும் குந்தியிருக்கனும்.
அவுத்தப்போயி ஏப்பா அவுதிப்பட்டுக்கிட்டு கெடக்கனும்? இப்பிடிப்போயி சித்தங் கூறியும் இவங்கிட்ட தடுமாறிப்புட்டு வந்தா என்னாக் கெட்டுப்போச்சி? இருந்தாப்பிடியிருந்து எனக்கு தெங்கற* நெனப்பெடுத்துக்கிச்சு.
ஆம்பிள தெரண்டு ஆளாளா ஒடனே கண்ணாலங் கார்த்தி , அவனுக்குண்டான குடும்பங்குட்டி உற்பத்தி ஆகுது. அப்பிடியதுக்கு வசிதிப்பத்தலைன்ன அததுக்குபொண்டுங்க இருக்கறாங்க அங்க போயி அம்பதுன்னும் நூறுன்னுங் கடஞ்சொல்லிக்கூட அறுப்பத் தீத்துக்கறாங்க. பொம்பள சமைஞ்சா பெத்தவிங்க கடம்பட்டு , ஒடம்பட்டு ஒருத்தங் கையில புடிச்சிக் குடுக்கறாங்க. அதுச் சுத்தப்படலியா , அவப்பாத்து துணிஞ்சா அவ பொச்சி பொறன ஆணாகப்பட்ட அத்தன சீவனுங்களும் காரோடத்து நாயி மாதர காசுங்கையுமா சுத்தறாங்க.
இந்த திக்கத்த ஆத்துமாவுக்கு ஊத்த ஒடம்புல பிப்பு எடுத்தா அதக்கண்டு ஆத்த மருந்துண்டா? நம்பள அரிசின்னு அள்ளி பாப்பாருமில்ல , உமின்னு ஊதிப்பாப்பாருமில்ல்ல. பிரியப்பட்டு வலியினா வர்றங்கறவன ஏம்பா வாண்டானுச் சொல்லனுமின்னு நானு அவன அப்பிடிவுட்டுட்டு , இப்பிடி இந்தாண்ட வந்து ரோசனப்பண்டிக்கிருக்கவே, அவஞ்சீப்பு வண்டி ஆள ஓரங்கட்டி நிக்குது. வந்து ஏறுன்னு அவஞ்சொல்லுமிந்தி நானு மின்னித்தி சீட்டேறிக் குந்திக்கிட்டன்.
ஒரே அழுத்துல வண்டி எட்டிப் புடிச்சாப்பல கொடம்பையூரு கரட்டுக்கு வந்துட்டது. அடிக்கரட்ல வட்டப்பாறையும் பாழியுமா இருக்கும் பாரு ! அவுத்த வண்டிய நிப்பாட்டினான், பாற மேல மழக்காயித்த விரிச்சுட்டுட்டு வண்டியிலந்து நாலஞ்சி பொட்ணத்த எடுத்துப் பிரிச்சி வெச்சாம்பாரு ! எந்த சோத்துக்கடயில வாங்கனதோ! கறிச்சோத்துப் பொட்ணமாயிட்டயிருக்குது வட்ட வாகறயே நெய்யி மணக்குது.
மூக்குல பருக்க வர தின்னுப்புட்டு எந்திரிச்சன். அன்னந்தினியும் வாயே பேசாமயிருந்தவன் " சரக்கு சாப்டுறியா" ன்னு ரெண்டு வெராந்தி பாட்லயும் எடுத்து மின்ன வெச்சான் ஏட்டு.
அதயுஞ் சைசா மண்டயத்திருவி வாயில ஊத்திக்கிட்டன், வீக்கங்கண்ட வவுறு தூக்கங்கேட்டுது. அதோட அளவான போத, ஆடியாடி அலண்ட ஒடம்புக்கு தோதாயிருந்தது. குளுங்காத்துச் சிலுச்சிலுங்க, மேலுப்பசபசங்க எனக்கு ஏனா தொப்ளச்சுத்தி புரு புருங்குதே! அப்பிடியே கட்டயக் கீழச்சாச்சி கண்ண மூடனம்பாரு ஏட்டும் எம்மேல சாஞ்சான்.
சாவலு நல்ல பெருஞ்சாதி சாவலு. அணைய அணைய ஒணக்கையா இருந்திச்சி., இப்பிடியே கதய ஒப்பேத்தி ஓட்டி, கூத்த கொண்டயத்துக்கு கொண்டு போயி மங்களம் பாடிப்புடலாமின்னு நாங்கெனாக் கண்ட மாயத்துல , மின்னாம மொழங்காம எண்ணத்துல இடி எறங்குதே!
ஏப்பா உரியேறன சாத்ரீகப் பூன தயிரிருக்க சட்டிய எத்தன நேரம் நக்கும்? வெறியெடுத்து ஆவு ஆவுன்னு என்ற அடிமடிய தொழனவனுக்கு ஆட்டு ஒதப்பையாட்டம் எம்புடுக்குச் சிக்கும்பிடி அவம் மொவற நறவல்ல கையுட்டாப்ல சுண்டிப்போச்சி. "த்தூ"ன்னு காறித்துப்புனவங் காது காதா அப்பறாஞ் சடையாம.
ஓரடியா? ரெண்டடியா ? " அய்யோ சாமி நானு அறியாத பித்தியில தெரியாம தப்பு பண்டிப்புட்டன். வுட்று சாமி நானு ஓடிப்பொழச்சிக்கிறன்னு அழுது பரிதவிங்கறன். அவங்காலப் புடிச்சிக் கெஞ்சறன். அவங்காய காதறந்த மேல ஓக்க ! அதயெதயுங்காதுல போட்டுக்கவேயில்ல. " மி யெம்மா பூக்குல தெங்கோ! ஓரி திக்கர நீ பணியின காமிச்சேவு"ன்னு மயித்த வளச்சிப்போட்டு சும்மா குப்பு குப்புன்னு குப்பி , என்னய மிங்கட்டு பிங்கட்டு கட்டி சீப்பு வண்டியீல தூக்கிப்போட்டு கண்ணாடியச் சாத்தி , கதவுசந்துல எங்காலு ரெண்டையும் வெளியே இழுத்து , ஓரட்டாங்கையில புடுச்சிக்கிட்டான்.
சோத்தாங்கையில அடிப்போன பூணோட அத்தச்சோட்டு குண்டாந்தடிய புடிச்சி, எல்லப்பன்னிய குத்தறாப்போல என்ற உசுரு நெலயில ஒரேக்குத்து! ஆண்டவங்குடுத்த அந்த ஆதார பொருளு கொழண்டு கலங்கிப்போச்சு. இன்னும் நாலீடுப் போட்டு அப்பையே அடிச்சிக்கொன்னிருந்தா ஆயிருக்கும் வத வதயான வதப்பண்டி , வாய்க்கா கரையில வாரிச் சூறையிட்டுப்புட்டு போயிட்டான்.
ராவெல்லாம் எங்க கெடந்தன் ? எப்பிடி பூதப்பாடி வந்தன் ? ஆருக்கொண்டாந்து ஆயாவூட்ல போட்டது ஒரு பிருவுந்தெரில. நாம் பொழச்சது மாதா புண்ணியம் ! மறுசென்மம். " பொறப்படு ஆயா வேலூருக்கு, போயி டாக்டரிண்ட கைப்போட்டுக்கிட்ட்டு வந்தரலாமின்னு" கண்ணு முழிச்சதும் மொதக்காரியமா ஆயாளக்கூப்பிட்டு சொன்னேன்.
அருஞ்சொற்பொருள்கள்:
தெரட்டி = பூப்புனித நீராட்டு விழா
சொணையான் = சம்பளம்
வரிக்கல = வாங்கல
ஆட்டத்துக்கு = கரக்காட்டத்துக்கு
அலங்காரம் =தெருக்கூத்து
கூத =போதை
பொட்டைங்க = திருநங்கைகள்
தாயம்மா = திருநங்கைகளுக்கான உறுப்பு நீக்கும் சடங்கு செய்பவர்.
கைபோடுதல் = உறுப்பு நீக்கும் நிகழ்வு
கோத்தி = ஆண் உறுப்பு நீக்காமலே பெண் உணர்வுடன் வாழ்பவர்
ஆயாமாருங்க = திருநங்கைகளிடையே வழங்கும் உறவுமுறை
சேலாமாருங்க= மகள் உறவுமுறையினர்
பிந்தாயம்மா= திருநங்கைகளுக்கான உறுப்பு நீக்கும் சடங்கின் போது சம்பந்தப்பட்ட திருநங்கையை பிடித்துக்கொள்பவர்
மானி/சுனி/புடுக்கு/குஞ்சி = ஆண்குறி
கப்பு போடுதல் = முகத்தில் உள்ள முடிகளை அகற்றுதல்
ஜோக்கேத்தி = பாவடை,சேலை முதலான பெண்கள் தரிக்கும் உடைகளையும் தோடு மூக்குத்தி கொலுசு மெட்டி முதலான ஆபரணங்களையும் அணிவித்தல்
மோரி = குளிக்கும் அறை
காவு = புண்
தந்தா = திருநங்கைகள் புரியும் பாலியல் தொழில்
ரோனு = லோன் ( வங்கிக்கடன்)
பாணி = நிகழ்ச்சி தோல்வி
தானவதி மழை = பங்குனி மாதத்தில் பொழியும் உத்திரட்டாதி மழைக்கும் ரேவதி மழைக்கும் இடையே எதிர்பாரது பெய்யும் மழை
சாரி வேசம் = பெண்வேடம்
வக்ரகேது பலி = ஒரு சிவபுராணக்கிளைக்கதை
சிப்பம் = பாக்கெட் சாராயம்
தெங்கிற = புணர்கிற
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : அறிமுகம், சிறப்பு விருந்தினர், சிறுகதை
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - லக்கிலுக் - அறிமுகம்
இனிய உறவுகளுக்கு
தீபாவளி நல்வாழ்த்துகள்!!
தீபாவளி என்றால் 'தௌசண்டவாலா' இல்லாமலா?
'தௌசண்டவாலா' என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியுமோ தெரியாது. கிராமங்களில் சரவெடி என்று சொல்வார்கள். அந்த சரவெடிகளில் சாதாரணமாக 100 அல்லது 200 வெடிகள் மட்டுமே ஒன்றாகக் கோர்த்து இணைக்கப்பட்டிருக்கும். 'தௌசண்ட்வாலாவில் 1000 வெடிகள் ஒன்றாக வெடித்துச் சிதறும். மிகப் பெரும் ஆரவாரமும் உற்சாகமும் பொங்குமிடங்களில் இந்த வெடியை வெடித்துக்கொண்டாடுவது நடைமுறை.
வலையுலகிலும் ஒரு சரவெடி இருக்கிறது - அதன் பெயர்தான் லக்கிலுக்
'நான் சுஜாதாவோ பாலகுமாரனோ இல்லை' என்று தனனைப்பற்றி எளீமையாகச் சொல்லிக் கொள்ளும் லக்கியின் எழுத்துலகம் எளிமையையும் சுவாரஸ்யத்தையும் மட்டுமே முன்னிறுத்திச் செல்வது. வாசகனை விட்டு விலகி நின்று பேசாமல் அவனோடு தோழமையுடன் கதைக்கும் வெகுஜன எழுத்து உத்தியை இலகுவாகக் கையாளும் லக்கிலுக்கை சரவெடிகளின் காலமான தீபாவளியின் போது பண்புடன் வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவதில் பெருமை கொள்கிறோம். இதோ..இனி லக்கிலுக்கின் வார்த்தைகளிலேயே அவரது அறிமுகம்.
லக்கிலுக் - அறிமுகம்!
வணக்கம் தோழர்களே!
'தோழர்' என்று விளிப்பது எனக்கு வசதியாக இருக்கிறது. 'அநீதியை கண்டு உனக்கு ஆத்திரம் வருகிறதா? நீயும் என் தோழன்' என்று சேகுவேரா சொன்னாராம். அநீதியை கண்டு உங்களுக்கு ஆத்திரம் வராவிட்டாலும் கூட உங்களையும் தோழர் என்று அழைப்பதில் எனக்கு ஆட்சேபணை எதுவுமில்லை.
பண்புடன் குழுமம் என்னை தீபாவளிவார நட்சத்திரமாக தேர்ந்தெடுப்பதில் வருத்தம் கொள்கிறேன். காட்சிக்கு நட்சத்திரம் மிகச்சிறியதாக மினுக் மினுக்கென்றிருக்கும். என்னை இவ்வார நிலவாகவோ, சூரியனாகவோ தேர்ந்தெடுத்திருந்தால் மகிழ்ச்சி கொள்வதில் அர்த்தம் இருந்திருக்கும். நிலவும், சூரியனும் உலகத்துக்கு தெரியும் வானை ஆக்கிரமிக்கும் வஸ்துக்கள் என்பதால் அவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கிறேன்.
உள்ளாடை வாங்கக் கூட கடைப்பெண்ணிடம் பேச வெட்கப்படுவேன் என்பதால், அப்பா என்னை அடிக்கடி 'சபக்கோழை' என்று திட்டுவார். இந்த வார்த்தைக்கு சரியான பொருள் எனக்கு தெரியாது. ஆனாலும் புதியதாக அறிமுகமாகிறவர்களிடம் சகஜமாகப் பேச வெட்கப்படுவேன் என்ற அர்த்தத்தில் திட்டுகிறார் என்ற அளவுக்கு புரிந்துகொண்டிருக்கிறேன். ஒரு விபத்தாக இங்கே நான் ஏற்கனவே உறுப்பினர் என்றாலும் இந்தக் குழுமத்தை எனக்குத் தெரியாது. இந்தக் குழுமம் என்றில்லை, எந்த கடிதக்குழுமமும் எனக்கு பரிச்சயமில்லாதது. குழுமம் என்ற வடிவு என்னைக் கவராதது அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம்.
இங்கு யாரெல்லாம் உறுப்பினர்களாக இருக்கிறீர்கள் என்றும் தெரியாது. ஆசிப் அண்ணாச்சி, நந்தா, கென், பிரேம்குமார், அண்ணன் என்.சுரேஷ், மோகன் தாஸ் என்று எனக்கு வலையுலகிலும், நேரிலும் அறிமுகமான சிலர் இங்கிருக்கிறீர்கள் என்றளவுக்கு தான் தெரியும். பெரும்பாலானவர்களை தெரியாது என்பதால் புதியதாக என்னை உங்களிடம் அறிமுகப்படுத்திக் கொள்வதில் எனக்கு கொஞ்சம் சங்கோஜம் இருக்கிறது.
எனவே என்னை அறிந்த சில தோழர்களே என்னைப் பற்றிய அறிமுகத்தை நல்லவிதமாகவோ, கெட்டவிதமாகவோ (கடவுள் நம்பிக்கையைப் போலவே நல்லது கெட்டது என்பதிலும் எனக்கு நம்பிக்கையில்லை) மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்தினால் மனமகிழ்வேன். இவ்வாரத்தில் முடிந்தவரை என் அறிவுக்குட்பட்ட எனது எழுத்தாற்றலை இங்கே முயற்சித்துப் பார்க்க களம் அமைத்து தந்தவர்களுக்கு நன்றி!
குறிப்பு : இந்த முதல் கடிதத்திலேயே 'எனக்கு', '...றேன்', 'வேன்', 'என்', 'என்னை' என்று ஏகப்பட்ட தனிமனித விளிப்புகள் இருக்கிறதே என்று சலித்துக் கொள்ள வேண்டாம். இன்னமும் 'நான்' என்ற அகந்தையில் இருந்து வெளியே வருமளவுக்கு சித்தனாக 'நான்' மாறிவிடவில்லை என்பதால் குறைகளை பொறுத்தருளவும்.
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : அறிமுகம், வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தமிழ்நதி - அறிமுகம்
தமிழ்நதி - அறிமுகம்
என்னைப் பற்றி என்ன சொல்வது? என் பெயர் தமிழ்நதி என்று எழுதவே விருப்பம்.
'என் பெயர் அகதி'என்றே எப்போதும் எழுதிச் செல்கின்றன விரல்கள். சொந்த
மண்ணைப் பிரிந்து எங்கெங்கோ சிதறி வாழ்ந்துகொண்டிருக்கும் இலட்சக்கணக்கான
ஈழத்தமிழர்களில் ஒருத்தி. பொழுது புலர்ந்துகொண்டிருக்கிறது போர் நடக்கும்
பூமியில் உள்ளவர்களை மட்டும் விட்டுவிட்டு. எப்போதாவது நாடு திரும்பலாம்
என்ற நம்பிக்கைச் செடியை வாடாமல் வைத்திருப்பதே பெரிய பாடாக இருக்கிறது.
எழுத்து… ஆரம்பத்தில் என் ஆதர்சத்திற்குரியவர்கள் தங்களது எழுத்துக்களால்
என்னைப் பாதித்துக்கொண்டிருந்தார்கள். பழிக்குப் பழியாக நானும்
ஆரம்பித்திருக்கிறேன் பாதிக்கிறேனா… வாசிப்பவர்களைச் சோதிக்கிறேனா
என்பது எனக்குத் தெரியவில்லை. யாரோ ஒரு முகம் தெரியாதவர் என்னுடைய
எழுத்தை வாசிக்கிறார் என்பதொன்றே திருப்தி. தமிழ்மணத்தின் வாயிலாக இணையப்
பெரு நீரோட்டத்தில் ஒரு துளியாகவேனும் இணைந்திருக்கிறேன் என்பதில்
பெருமிதம். பண்புடனில் அன்புடன் எழுத அழைத்தார்கள். நிறைவாக எழுத
நேரமில்லை. பொருள்வயப்பட்ட இவ்வுலகில் எழுத்தொன்றே இப்போதைக்கு இருள்
விரட்டும் ஒளிப்பொட்டு என்பது எனது டிஸ்கி. சிலவேளைகளில் இப்படியெல்லாம்
எழுதி நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ள வேண்டியிருக்கிறது இல்லையா 'பண்புடன்'
நண்பர்களே!
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : அறிமுகம், வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - இளவஞ்சி - அறிமுகம்
இளவஞ்சி - அறிமுகம்
சார்ளி சாப்ளின் படம் பார்த்திரூக்கிறீர்களா? படம் முழுக்க விழுந்து சிரிக்கும்போதும் அதன் பின்னணியில் நீங்காத துன்ப இழையொன்று நம்மையறியாமலேயே ஒரு நிழல் போலப் பின் தொடர்வதை நம்மால் உணர முடியாது. படம் முழுக்க முடிந்து ரசித்து சிரித்தபின்னரே அது நம் சிந்தைக்குள் நுழைந்து நம்மைச் சிதைக்கும்.
இளவஞ்சியின் எழுத்துக்களில் துள்ளும் இளமையும் உற்சாகமும் சீண்டலும் இதே ரகம்தான். மிகுந்த உற்சாக மனநிலையில் வாசிக்க வைத்து அந்த உற்சாகத்தின் பின்னணியில் ஒளிந்து கிடக்கும் சோகத்தை அவர் தனக்கேயுரிய பாணியில் வெளிப்படுத்தும்போது நமக்குள் எழும் அடக்க முடியாத உணர்வுகளைச் சொல்ல முடியாது.
மிக இலகுவான வாசிப்பனுவம் மிகத் தேர்ந்த எழுத்து நடை. வலிந்து திணிக்காத இயல்பான நகைச்சுவை, சொல்வதைத் தெளியச் சொல்லும் ஆற்றல், தெளிவானவைகளே மட்டுமே பேசும் சிந்தை என்று அவசியம் வாசிக்கப்பட வேண்டிய பதிவர்களின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்திருக்கும் பதிவர்களில் இளவஞ்சியும் முக்கியமானவர்
புகைப்படக் கலையில் பித்துப்பிடித்து அலையும் இளவஞ்சி மனைவியோடும் மகள் காதம்பரி மற்றும் மகன் கதிரெழிலோடு தற்போது வசிப்பது சென்னையென்றாலும் கொங்கு மண் வாசனையில் வளர்ந்தவர். தமிழ் மணம் திரட்டியின் ஆரம்ப கால நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர். மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார்.
அறிவுஜீவித்தனமென்பதற்காக மெனக்கெடாமல் சாமான்யர்க்ளில் ஒருவராக உலாவர விரும்பும் தனித்துவம் மிக்கவர் - நம்மைப் போலவே
பதிவு செய்தது : பண்புடன் at 1 பின்னூட்டங்கள்
பதிவு வகை : அறிமுகம், வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - ஆதவன் தீட்சண்யா
ஆதவன் தீட்சண்யா - அறிமுகம்
எழுத்து, இயக்கம் எல்லாம் மக்களுக்காகவே என்று இயங்கும் தமிழ் படைப்பாளிகளில் மிக முக்கியமானவர் ஆதவன் தீட்சண்யா. புறத்திருந்து, பூஜ்ஜியத்திலிருந்து துவங்கும் ஆட்டம், தந்துகி எனும் மூன்று கவிதை நூல்களையும், எழுத வேண்டிய நாட்குறிப்பின் கடைசி பக்கங்கள் எனும் சிறுகதை தொகுப்பையும் வெளியிட்டுள்ளார். கட்டுரையாக எழுத வேண்டிய ஒரு செய்தியை சிறுகதையாக எழுதுவதும், ஒரு நாவலுக்கான கருப்பொருளை ஒரு கவிதையில் பொருத்திச் செல்வதும், எழுத்தில் புதுப்புது வடிவங்களை பழகுவதும் ஆதவனுக்குக் கைவந்த கலை. 'புதுவிசை' இதழின் ஆசிரியராகவும், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைச் செயலாளராகவும் செயல்படுகிறார்.
ஒடுக்குமுறை எந்த வடிவில் இருந்தாலும் அதை உக்கிரமான மொழியில் எதிர்கொள்ளும் ஆதவன், எழுதுவதோடு தன்னுடைய வேலை முடிந்தது என்றில்லாமல், போராட்டங்கள், பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள் என மாநிலம் முழுவதும் பிரயாணம் செய்தபடி இருக்கிறார்.
ஆதவனின் அனுமதியுடன் அவரது இரு கவிதைகளையும், சிறுகதையையும் பண்புடன் குழுமத்தின் ஆண்டுவிழா கொண்டாட்டத்திற்காய் இனிய நண்பர் கென் பெற்றுத் தந்தார். அவருக்கும், பண்புடன் குழுமத்தின் உறுப்பினர்களோடு தம் படைப்புகளை பங்கு வைக்க முன் வந்த தமிழின் முக்கிய படைப்பாளியான ஆதவன் தீட்சண்யாவுக்கும் நன்றி!.
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : அறிமுகம், சிறப்பு விருந்தினர்
பண்புடன் ஆண்டு விழா - மீள்பதிவுகள் - 4
கவிஞர் சிவரமணி - கவிதைகளும் அறிமுகமும்
- அய்யனார்
http://groups.google.com/group/panbudan/browse_thread/thread/590a964fcfa0b1a6/47dceedbeaf6c87f?lnk=gst&q=%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%AE%E0%AE%A3%E0%AE%BF#47dceedbeaf6c87f
நட்சத்திரங்கள் இறந்துபோனவனின் கண்களைப் போல இருக்கின்றன என்ற கவிஞர்
சிவரமணியைப் பற்றித் தெரிந்தவர்கள் யாரேனும் இருக்கிறீர்களா?ஆனந்தவிகடனில் சில
வருடங்களுக்கு முன்பு இவரது கவிதை ஒன்றினைப் படித்தேன்.சிவரமணி என்கிற பெயர்
மறந்துபோய் கவிதை மட்டும் மனதில் ஒட்டிக்கொண்டது. யுத்தகால இரவொன்றின்
நெருக்குதல் எமது குழந்தைகளை வளர்ந்தவர்களாக்கிவிடுகிறது.... என்பதாய்
தொடங்கும்.அந்தக் கவிதையை அப்போதைய என் வாழ்வோடு தொடர்பு படுத்திக் கொண்டு
பார்த்துக்கொண்டதால் அது அப்படியே மனதில் தங்கிவிட்டது.சேரனின் உயிர் கொல்லும்
வார்த்தைகளை நேற்றுப் படித்துக்கொண்டிருந்த போது கவிஞர் சிவரமணி தற்கொலை செய்து
கொண்டதை தெரிந்து கொள்ள முடிந்தது.அத்தோடு தற்கொலைக்கு முன் தன் கவிதைகளை
எரித்து விட்டதாயும் நண்பர்களிடமிருந்த சில கவிதைகள் மட்டும்
எஞ்சியிருப்பதாயும் சேரன் எழுதியிருந்தார் பின் நண்பர் டிசே மூலம் சிவரமணி
கவிதைகள் சிலவற்றை இணையத்தில் பெற முடிந்தது..அவற்றுள் சில
முனைப்பு
பேய்களால் சிதைக்கப்படும்
பிரேதத்தைப் போன்று
சிதைக்கப்பட்டேன்
ஆத்மாவின் உணர்ச்சிகள் எல்லாம்
இரத்தம் தீண்டிய கரங்களால்
அசுத்தப்படுத்தப்பட்டன.
என்னை
மேகத்திற்குள்ளும்
மண்ணிற்குள்ளும்
மறைக்க எண்ணிய வேளையில்
வெளிச்சம் போட்டுப் பார்த்தனர் .
அவர்களின்
குரோதம் நிறைந்த பார்வையும்
வஞ்சகம் நிறைந்த சிரிப்பும்
என்னைச் சுட்டெரித்தன.
எனது
ஆசைகள் இலட்சியங்கள்
சிதைக்கப்பட்டன.
அவர்களின் மனம்
மகிழ்ச்சி கொண்டது.
அவர்களின் பேரின்பம்
என் கண்ணீரில்தான்
இருக்கமுடியும் .
ஆனால் என் கண்களுக்கு
நான் அடிமையில்லையே
அவர்களின் முன்
கண்ணீரக் கொட்ட
என் வேதனை கண்டு
ரசித்தனர் அவர்கள்
என்றைக்குமாய் என்தலை
குனிந்து போனதாய்க்
கனவு கண்டனர் .
ஆனால்
நான் வாழ்ந்தேன்
வாழ்நாளெல்லாம் நானாக
இருள் நிறைந்த
பயங்கரங்களின் ஊடாக
நான் வாழ்ந்தேன்
இன்னும் வாழ்கிறேன் .
--சி. சிவரமணி.
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : அறிமுகம், கவிதைகள், பண்புடன் மீள்பதிவுகள்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - பெனாத்தல் சுரேஷ் - அறிமுகம்
பெனாத்தல் சுரேஷ் - அறிமுகம்
கார் கதவை ஒரு மனுசன் மெதுவா தொறந்து விடுறான்னா ஒன்னு கார் புதுசா இருக்கணும் அல்லது காருக்குள்ல இருக்குற பொண்டாட்டியோ / சின்ன வீடோ / காதலியோ புதுசா இருக்கணும்கறதுதான் நியதி. புதுசா இருக்குற வரைக்கும் எல்லாம் பிரம்மாதம்தான்.- சோடா பாட்டில் பொங்குற மாதிரி.ஆனா, தொடர்ந்து எழுதவும் எழுதுனதைப் படிக்க ஆட்களைத் தக்க வச்சுக்கறதும் பெரிய பாடு - அதுவும் நாளுக்கு நாலு பதிவுகள் வரத்துவங்கியிருக்கும் கால கட்டத்தில். பெனாத்தலைப் பொறுத்தவரைக்கும் அந்தப் பிரச்னைக்கு இடமில்லை. அவர் எழுதினால் வாசிப்பதற்கென்று மக்கள் இருக்கவே செய்கிறார்கள். ஏனென்றால் எழுதினால் வாசிக்கும்படியாக இருக்குமென்ற நம்பிக்கையை இந்த மூன்றாண்டுகளில் அவர் வளர்த்தெடுத்திருக்கிறார். இன்றைய சூழலில் இப்படி ஒரு நம்பிக்கையைப் பெறுவதென்பதே பெரிய விசயம்தானே?
கிரிக்கெட்டில் நன்றாக செட்டில் ஆகி விட்ட பேட்ஸ்மேனுக்கு கிரிகெட் பந்து ஃபுட்பால் அளவுக்குப் பெருசாகத் தெரியுமாம். பெனாத்தல் இப்போது அம்மாதிரி தமிழ்வலைப்பூவுலக வீச்சுகளைப் புரிந்துகொண்டு அதற்கேற்ப தன்னை தயார்படுத்திக் கொண்டார் என்றே தோன்றுகிறது.
மோட்டுவளையை வெறித்துக் கொண்டு நவீனத்தை படுத்துபவ்ர்கள், கவிதையை வேட்டியை உருவி விடும்வரை விட்டுவிடக் கூடாது என்ற கொள்கை வைராக்கியத்தோடு வலம் வரும் கவிஞர்கள், கழுத்து வலிக்க வலிக்கத் திரும்பிப் பார்க்கும் மலரும் நினைவுகள், திரும்பத் திரும்ப மொக்கைகள் என்று ஒரே மாதிரியாகவே எழுதுபர்களுக்கு மத்தியில் சுரேஷின் எழுத்து எல்லாம் கலந்த கதம்பமாக இருக்கிறது
சிறுகதை, கவிதை, அரசியல், சமூக அக்கறை, திரைப் பார்வை, இலக்கியம் குறித்த அலசல்கள், ஃப்ளாஷ் தொழிநுட்ப உதவியுடன் கலாய்த்தல்கள் என்று பன்முகம் கொண்ட பதிவுகளாக அவை விரவிக் கிடக்கின்றன. எல்லாவற்றிலுமே வாசிப்பவர்களை ஈர்க்கும் விதம் மெல்லிய நகைச்சுவை பரவிக் கிடக்கிறது. அடிப்படையில் தனது எழுத்து எந்த சார்புநிலைக்குள்ளும் புகுந்துவிடக்கூடாதென்ற எச்சரிக்கை மனப்பான்மையோடு எழுதுவதே இதற்குக் காரணம்.
விக்கி பசங்களில் பங்களித்தாலும் சரி, வருத்தப்படாத வாலிபராக வலம் வந்தாலும் சரி; கில்லிக்கு வாசிப்புரை எழுதினாலும் சரி; இன்னமும் அவரை ஓரம்கட்டி முத்திரை குத்தி யாரும் சாத்திவிடாமல் தப்பித்துக் கொண்டு வந்திருக்கிறார் என்பதே கூட மூன்றாண்டு கால சாதனையை விட மிக உயர்ந்த சாதனைதான்.
பற்றியெரியும் சேது சமுத்திரத் திட்டமானாலும் சரி, உபி தேர்தலில் பாஜக வெளியிட்ட விசிடி பற்றிய பார்வையாக இருந்தாலும் சரி, அமீரகத்தில் இந்துக்களுக்கு எதிரான நிலை இருப்பதாகப் புரளி பரவியபோது அதனை மறுத்து எழுதிய போதும் சரி - தனது நிலையை மிகத் தெளிவாகச் சொல்லும் நேர்மை அவருக்கு வாய்த்திருப்பது பாராட்டுக்குரியது.
கவிமடத்தின் தலைமைச் சீடனாக இருந்தும் கூட கவுஜை எழுதி ஆட்களைத் தாளிக்க வேண்டுமென்ற எண்ணம் இல்லாமல் எப்போதேனும் மட்டும் கவிதையை எழுதுவதும், அந்தக் கவிதை கவிதையாகவே இருப்பதும் அதனாலேயே அவர் அதிகம் கவிதை எழுதாமலிருப்பதும் அவரது புத்திசாலித்தனத்தைக் காட்டுகிறது. அதற்காகக் கவிமடத்தின் பெருமையைக் காப்பாற்றவும் அவர் தவறியதில்லை. அவர் எழுதிய காப்பி கசக்கும் கவிதை ஒரு உதாரணம்
தேன்கூடு சிறுகதைப் போட்டியில் வெற்றி, சிறந்த தமிழ் பதிவர் , அவள் விகடனே அங்கீகாரம் தந்த அவன் விகடன் எனப் பல சிறப்புகள் இருந்தபோதும் அது பற்றிய அலட்டல் அதிகம் இல்லாமல் நல்ல பதிவுகளைக் கண்டால் ஓடிச்சென்று வாழ்த்துவதும், குறையென்று கண்டால் விவாதிப்பதும் கூட சுரேஷின் சிறப்புகளில் முக்கியமானதெனக் கருதுகிறேன்
விக்கி பசங்களுக்காக தனது துறை சார்ந்த பதிவில் மிகச் சிறப்பான தமிழில் எளிய விளக்கங்கள் அளிக்க் முடிந்த அவரால் சில பதிவுகளில் தமிங்கலத்தைத் தவிர்க்க முடியாமல் இருப்பது என்னைப் பொறுத்தவரை குறைதான்.
வித்தியாசமாக யோசிப்பது, நக்கைச்சுவை மிளிர எழுதுவது இவை இரண்டும்தான் பெனாத்தலின் மிகப் பெரிய பலம். போக்கிரி படத்தில் விஜயின் முகபாவங்களை அவர் சொல்லியிருந்த விதம் நினைத்தாலே இன்னமும் சிரிப்பை வரவழைக்கிறது. 'அம்மு'வை எல்லாரும் 'ஆஹா ஓஹோ' என்று சொல்லும்போது கூட்டத்தில் கோவிந்தா போடாமல் 'அடப் போங்கய்யா! இதெல்லாம் ஒரு படமா?' என்று கேட்கும் துணிச்சலும் சுரேசுக்கு நிறையவே இருக்கிறது
நகைச்சுவை என்பதற்காகக் கோமாளித்தனமோ வலிந்த திணிப்புகளோ இல்லாமல் இயல்பு நடையிலேயே எழுத முடிவதும் அப்படி எழுத முடியுமளவுக்கு நிறைய கற்பனை வளம் இருப்பதும் டப்பாவில் இன்னமும் பெருங்காயம் இருக்கத்தான் செய்கிறது என்பதை சொல்லிக் கொண்டே இருக்கிறது.
பதிவு செய்தது : பண்புடன் at 0 பின்னூட்டங்கள்
பதிவு வகை : அறிமுகம், வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தருமி - 6
இன்று …
- தருமி
வேகமாக வளரும் அறிவியல் மாற்றங்கள், அதனால் ஏற்படும் புதிய சமூக விளைவுகள், வாழ்வியல் மாற்றங்கள் – எல்லாமே மிக வேகமாக நம்மைச் சுற்றி நடந்து வருகின்றன. என் வயதுக்குள்தான் எத்தனை எத்தனை மாற்றங்கள்! இந்த வளர்ச்சிகளையும், மாற்றங்களையும் பார்க்கும்போது மிகுந்த ஆச்சரியமாக உள்ளது. இந்த ஆச்சரியங்களை உணர்ந்து அனுபவிப்பதில் யார் அதிர்ஷ்ட சாலிகள் என்று அவ்வப்போது மனதில் ஒரு எண்ணம் எழுவதுண்டு. முதிய வயதில் இருக்கும் என் போன்றோரா, இளம் வயதில் இருப்பவர்களா, இல்லை என் பேரப்பிள்ளைகள் போல் இன்னும் எதிர்காலத்தை நோக்கி நடப்பவர்களா – இவர்களில் யார் இந்த நித்தம் நித்தம் அரங்கேறும் அதிசயங்களைக் கண்டு அதிசயித்து அனுபவிக்கும் பேறு பெற்றவர்கள்?
Alvin Toffler எழுதி பிரபலமடைந்த Future Shock என்ற நூலில் இப்போது நடைபெறுவது knowledge explosion – அதைத் தொடர்ந்து வருவது பெரும் மாற்றங்கள். வரப்போகும் இந்த பெரும் மாற்றங்களை எதிர்கொள்ள நம்மை நாமே தயார் நிலையில் வைத்துக் கொள்ளாவிட்டால் நாளைக்கு நமக்குக் கிடைக்கக் கூடிய அதிர்ச்சிகளையே Future Shock என்றார். இன்றைய குழந்தைகள் இன்று நடக்கும் மாற்றங்களைப் பற்றியேதும் அறியார்கள் . நடுவயதினருக்கோ இதில் பெரியதாக ஏதும் வியப்பிருக்காது. ஆனால் என் போன்றோருக்கு இந்த மாற்றங்கள் தரும் வியப்புகளைப் பற்றித் தெரிந்து கொள்ள ஒரு சின்ன உதாரணம் :
அந்தக் காலத்துத் தமிழ்ப்படங்களில் கதாநாயகர்கள் அந்தக் கருப்புத் தொலைபேசியைக் கையில் எடுத்துக்கொண்டு நடந்துகொண்டே பேசுவார்கள். ஆனால் எண்பதுகளின் கடைசிகளில் handset வந்தபோது ஆஹா என்றிருந்தது; ஓடிப்போய் ஒவ்வொரு முறையும் போனை எடுக்கக் கூட தேவையில்லாமல் பக்கத்திலேயே handset என்பதே ஆச்சரியாக இருந்தது. தொன்னூறுகளின் நடுவில் கைத்தொலைபேசியைப் பார்த்து நான் வாய் பிளந்து நின்றிருக்கிறேன். முதலில் தமிழ்நாட்டில் சென்னையில் மட்டும் தொலைபேசி இணைப்பு இருந்தது. RPG Cellular..? கறுப்பாக நீளமாக 'கொம்பு' வச்சுக்கிட்டு, பணக்கார மக்களின் அந்தஸ்தைக் காண்பிக்கும் பொருளாக இருந்தது. கிசுகிசுவில்கூட கைப்பேசியின் மகத்துவம் வந்தது நினைவுக்கு வருது. சரத்குமார் ஒரு நடிகையுடன் அப்படி பேசிக்கொண்டேயிருந்தாராம். நிமிடத்துக்கு இரண்டு பேருக்கும் ஏழேழு ரூபாய் .. எந்த தயாரிப்பாளரின் பணமோ? என்று விசனப்பட்டு பத்திரிகைகளில் ஒரு கிசுகிசு! ஆ.வி.யில் ரெண்டு மூட்டை பருத்திக் கொட்டையும், ரெண்டு மூட்டை புண்ணாக்கும் அனுப்பிவிடு என்று கைத்தொலை பேசியில் மாடுகளை மேய்த்துக் கொண்டே ஒருவர் பேசிக்கொண்டு போவது ஜோக்காக வந்திருந்தது. Toffler சொன்னதுபோல் அன்று அதிசயமாக இருந்தது; இன்று அவையெல்லாம் சாதாரணம் என்பதாக நடைமுறைக்கு வந்துவிட்டன.
ஆனால் என் பேரப்பிள்ளைகளுக்கு இதில் எந்த பிரமிப்பும் இல்லை. நடுவயதினருக்கும் இந்த வளர்ச்சிகள் அப்படிஒன்றும் பெரும் பிரமிப்பையோ ஆச்சரியத்தையோ தந்திருக்காது. ஆனால் பதின்ம வயதுகளில் போனை அருகில் வைத்துக் கூட பார்க்காத என் போன்றவர்களுக்கு http://dharumi.blogspot.com/2007/01/195.html அதைப் பற்றி இங்கு பார்க்கலாமே.
இந்த தொலைபேசிகளின் வளர்ச்சியின் பிரமாண்டம் புரியும். இன்னும் இதைப்பற்றி நிறையச் சொல்லலாம். அந்தக் காலத்தில் – அப்படி ஒன்றும் ரொம்ப வருஷங்களுக்கு முன்புகூட இல்லை – 80-கள் வரையிலும் தொலைபேசி இணைப்புக்கு ஆறு வருடங்கள் காத்திருக்க வேண்டும். 24 மணி நேரத்தில் தொலைபேசி இணைப்பு கிடைக்கும் "எங்க ஊரில்" என்று அமெரிக்கா சென்ற நண்பர் சொன்ன போது ஆச்சரியமாக இருந்தது உண்மை. இப்போது நம்மூரிலேயே over the counter என்றாகிவிட்டது.
இதுபோல் இன்னும் எத்தனை எத்தனை…? சின்ன வயதில் பார்த்த கார்கள் – அப்போதெல்லாம் அவைகளுக்குப் பெயர் பிளசர் கார் – எல்லாமே அயல்நாட்டு இறக்குமதிகள். வகை வகையாக இருக்கும். Buick, Hillman, Plymouth, Chevrolet, Morris Minor, நடு நடுவே Landmaster …. அதே மாதிரி மோட்டார் சைக்கிள்களில் Norton, Red Indian, B.S.A.… விதவிதமாக இருந்ததால் தூரத்தில் வரும்போதே அது என்ன கார் / மோட்டார் சைக்கிள் என்று கண்டுபிடித்து சொல்வது என்று ஒத்த வயதினரோடு விளையாடியது உண்டு. அப்படி இருந்தது கொஞ்ச காலம்தான். அதன் பிறகு பல காலத்துக்கு Ambassador, Fiat, Standard என்று கார்களில் மூன்றுவகை மட்டும்; மோட்டார் சைக்கிள்களில் Bullet, Jawa, Rajdoot என்று மூன்றுவகை மட்டுமே என்று சுருங்கி, இப்போதோ நித்தம் ஒரு மாடல். வெள்ளையும் கறுப்பும் மட்டுமே கார்கள் என்பது போய் இப்போது வண்ண மயம்தான். Simply riots in colours.
அட .. கார்களை விடுங்கள்.. சாதாரண பென்சிலை எடுத்துக் கொள்ளுங்கள். மிஞ்சிப் போனால் வழக்கமான மரக்கலர் பென்சில்களைத் தவிர மஞ்சள் கலரில் நாங்கள் பார்த்திருப்போம். இப்போது .. கணக்கேது. வெளிநாட்டிலிருந்து, அதாவது அமெரிக்காவிலிருந்து (அந்தக் காலத்தில் foreign என்றாலே அமெரிக்காதானே!) நண்பர்கள் வந்தால் BiC என்று ஒரு ball point பேனா; அதன் பின் கொஞ்ச காலத்துக்கு ஸ்கெட்ச் பேனாக்கள், அடுத்து highlight pens என்று கொடுப்பதற்கு என்றே வாங்கி வருவார்கள். அடேயப்பா .. பிரான்ஸ் நாட்டிலிருந்து வந்த நண்பன் ஒரு Reynolds ballpen வாங்கி வந்து கொடுத்ததோடில்லாமல் ஒரு demo வேறு காண்பித்தான். அப்படியே செங்குத்தாக பேனா முனையைக் கீழே போட்டாலும் எழுதும் என்று செய்து காண்பித்தான். பார்த்த உடனே எனக்குப் பெரிய கவலை. இப்படிப்பட்ட நல்ல பேனா ஒருமுறை மட்டுமே பயன்படுத்தக் கூடிய use & throw-வாக இருக்கிறதே என்று. 'அங்கெல்லாம் அப்படித்தான்; ஒரு தடவை பயன்படுத்திட்டு நாங்க தூரப் போட்டுவிடுவோம்' என்றான். சே! ஃபாரின்னா ஃபாரின்தான் என்றுதான் நினைக்கத் தோன்றியது.
அடேயப்பா! முதன் முதல் மலேசியாவில் இருந்து வந்திருந்த ஒருவரிடம் ரொம்ப யோசித்து, தயங்கி, பேரம் பேசாமல் அவர் பயன்படுத்திக் கொண்டிருந்த ஒரு Parker Fountain பேனாவை விலை பேசி வாங்கியது எவ்வளவு சந்தோஷமாயிருந்தது. Parker பெயருக்கே ஒரு மரியாதை. அப்படி ஒரு ஃபாரின்மோகமும் பல வருஷங்கள் இருந்தது. அந்த மாயையில் தோன்றியவைதான் ஊருக்கு ஊர் அயல்நாட்டுப் பொருள் விற்கும் பர்மா பஜார் என்ற பெயரில் இருக்கும் கடைகள். ஆனால் இப்போது வெறுமனே திருட்டு சினிமா சிடிக்கள் மட்டுமே அங்கே பெரிதாக விற்கின்றன.
ஆனாலும் அயல்நாட்டு மோகம் நமக்கு இன்னும் குறையவில்லை என்றுதான் நினைக்கிறேன். அல்லது ஒரே ஒரு விஷயத்தில் மட்டுமாவது இருக்கிறது. நமது சினிமா படங்கள் மட்டும் உலகத்தரத்தில் வர வேண்டுமென நினைக்கிறோம். அந்த "தரம்" மட்டும்தான் இன்னும் கிடைக்கவில்லை; மற்றபடி அயல்நாட்டுப் பொருட்கள்தான் இப்போது எல்லாமே அப்படியே, அல்லது உள்நாட்டு பொருளாகவோ கிடைத்து விடுகின்றனவே. இப்போதெல்லாம் என்ன வாங்கி வர வேண்டும் என்று அங்கிருந்து பிள்ளைகள் கேட்டால்கூட சொல்வதற்கு ஒன்றுமில்லையென்று ஆகிவிட்டது .. Toffler சொன்ன global village இதுதானோ… ?
டார்வினின் பரிணாமக் கொள்கைகளில் அடிப்படையாக அவர் சொன்னதில் முக்கியமான ஒன்று: variations are the raw materials for changes. இன்று அந்த விதவிதமான விஷயங்கள் கண்முன்னால் விரிகின்றன. வீட்டுக்கே பசுவோடு, வைக்கோலால் செய்த கன்றுக்குட்டியுடனே வந்து அங்கேயே கறந்து பால் கொடுத்திட்டு போனாங்க .. இப்போ அந்த பால்தான் எத்தனை எத்தனை விளம்பரங்களோடு, விதவிதமான பாக்கெட்டுகளில் கிடைக்கின்றன. குடிக்கிற தண்ணியில்கூடத்தான் எத்தனை எத்தனை விதம்! இந்தக் காலத்துப் பசங்க 'ஃபிகர்' என்பதுபோல், அந்தக் காலத்தில் நாங்க வயசுப் பொண்ணுகளை "கலர்" என்போம். காரணம் பசங்க அனேகமாக வெள்ளைச் சட்டை; அப்படியே கலர் சட்டையாக இருந்தால் ரொம்ப வெளிர் நிறங்களில்தான். பொண்ணுக மட்டும்தான் பல வண்ண உடைகளில் இருப்பார்கள். காரண இடுகுறிப் பெயர் !!
இப்படி அனைத்திலும் varieties …
பரிணாம வளர்ச்சியின் அடிப்படையே அதுதான் என்று டார்வின் சரியாகத்தான் சொல்லியிருக்கிறார்.
பதிவு செய்தது : பண்புடன் at 2 பின்னூட்டங்கள்
பதிவு வகை : அறிமுகம், அனுபவங்கள், வார நட்சத்திரம்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - தருமி - 5
அந்த காலத்தில …
அது ஒரு நயா பைசா காலம்…
- தருமி
இப்போ எந்த ஊராயிருந்தாலும், நாட்டு வாழைப்பழம் என்ன விலையிருக்கும்..? ஒரு பழம் ஒரு ரூபாயிலிருந்து, ஒன்றரைக்குள் இருக்கும். சின்னப் பையனா இருந்தபோது வீட்டில் ஒரு அணா கொடுத்து பழம் வாங்கிட்டு வரச்சொல்லுவாங்க; அப்பவே விலையும் சொல்லி விட்டுடுவாங்க: 'அணாவுக்கு நாலும்'பான்; அஞ்சு கேளு'. அதே மாதிரி கடைக்காரர் நாலு சொல்லுவார்; அஞ்சு அப்டின்னு சொன்ன உடனே 'பிச்சுக்கோ' என்பார். அந்த ரேட்ல ஒரு ரூபாய்க்கு 80 பழம்; அதாவது ரூபாய்க்கு 16 அணா; ஒரு அணாவுக்கு நான்கு காலணா; நாலணான்னா கால்ரூபாய்…இப்படியே போகும். அந்த வாய்ப்பாடு இப்ப எதுக்கு? காலணாவில் இரண்டு டைப்: ஒன்று பெரிய வட்டக் காசு, இப்ப உள்ள ரூபாய் சைஸைவிட பெருசா இருக்கும்; இன்னொண்ணு ஓட்டைக் காலணா. சுண்டு விரல்ல மாட்டிக்கலாம். நல்லா வாய்ப்பாடு எல்லாம் படிக்கிறதுக்கு ஏத்த மாதிரி அரை, கால்,அரைக்கால்,வீசம்…அப்புறம் எங்க காலத்துக்கு முந்தி என்னமோ தம்பிடி கணக்கெல்லாம் சொல்லுவாங்க.. இப்பல்லாம் tables அப்டின்னு சொல்றீங்களே அந்த வாய்ப்பாடெல்லாம் அப்ப நாங்க நல்லா மனப்பாடமா படிக்கணும். அது என்ன கணக்குன்னே தெரியாது. ஒவ்வொரு வாய்ப்பாடும் 16 வரை படிக்கணும்; ஏன் 15 வரை மட்டும் இல்ல அல்லது 20 வரை இருக்கக்கூடாதுன்னு தெரியலை. அதுக்கும் ரூபாய்க்கு 16 அணா என்கிறதுக்கும் தொடர்பு ஏதும் இருக்குமோ? அப்படித்தான் இருக்கணும்.
சரி..சரி.. நாங்க படிச்ச வாய்ப்பாட்டைப் பற்றி எங்களுக்கு என்னென்னனு கேக்றீங்களா? அது சரிதான். ஆனாலும் பாருங்க அப்படிப் படிச்ச அந்த வாய்ப்பாடுகள் நம்ம நாட்டையே எவ்வளவு உசத்திச்சு தெரியுமா? house mate மாதிரி ஒரு சைனாக்கார நண்பரோடு 100 நாள் அமெரிக்காவில இருந்தப்போ, இரண்டு பேரும் சேர்ந்து கடை, கண்ணிக்கு (இந்த "கண்ணி"ன்ற வார்த்தைக்கு யாராவடது அர்த்தம் சொல்லுங்களேன்.)போவோம். அப்போவெல்லாம் இரண்டு பழக்கம் இரண்டு பேருக்குமே. எதை எடுத்தாலும் make எங்கேன்னு பார்ப்போம். நூற்றுக்கு 90 சைனாவாக இருக்கும்; ரொம்ப பெருமையா என்னைப் பார்ப்பார். பிறகு அவரவர் ஊர் காசுக்கு வேல்யூ போட்டுப் பார்ப்போம். நம்ம ஊரு காசுக்கு குத்து மதிப்பா 50-ஆல் பெருக்கிச் சொல்வேன்; அப்ப டாலருக்கு 47-48 ரூபாய்னு ஞாபகம். அவர் ஊர் காசுக்கு 8-ஆல் பெருக்கணும். மனக்கணக்குதான் நமக்கு அத்து படியாச்சே; டக்கு டக்குன்னு சொல்லிடுவேன். ஷாவோ - அதுதான் நம்ம சைனா நண்பர் பேரு - நம்ம சைனா நண்பருக்கு ஒரே ஆச்சரியமா போகும். ஒரு தடவை 58 டாலருக்கு அவரு காசுல எவ்வளவுன்னு கணக்குப் பண்ண அவரு மண்டையை உடச்சிக்கிட்டடு இருந்தார்; நான் போனதும் சட்டுன்னு 448-ன்னு சொன்னேன். 56 X 8 -இதை மனக்கணக்கா சொன்னதும் மனுஷன் அசந்திட்டார். எப்படி இப்படி டக்குன்னு சொன்னீங்கன்னு கேட்டார். முதல்ல 50 X 8 ஆல பெருக்கிட்டு, பிறகு 6 X 8 பெருக்கி அதைக் கூட்டிக்கவேண்டியதுதானேன்னு சொன்னேன். தலைவருக்கு ஒண்ணும் புரியலைன்னு தெரிஞ்சுது. அதுக்குத்தான இது வச்சிருக்கோம்ல அப்டின்னுட்டு கால்குலேட்டரை எடுத்து தட்ட ஆரம்பிச்சார். ஆனா, உடனே என்ன சொன்னார் தெரியுமா? 'இதுனாலதான் நீங்க சாஃப்ட்வேர்ல எக்ஸ்பெர்ட்டா இருக்கீங்க' அப்டின்னார். (software ஆளுகளே, உங்க மரியாதையை எவ்வளவு ஏத்தி உட்டுட்டு வந்திருக்கேன்; பாத்தீங்களா?) இப்ப அணா கணக்கில இருக்கிற நல்ல விஷயம் தெரியுதா?
இப்படி இல்லாம் நல்லபடியா போய்க்கிட்டு இருந்தப்போ அப்பா ஒரு நாள் இன்னும் கொஞ்ச நாளிலிருந்து இந்த காலணா, அரையணா, எல்லாம் போய்ட்டு நயா பைசா வரப்போகுதுன்னாங்க. கால் ரூபாய், அரை ரூபாய், ஒரு ரூபாய் எல்லாம் இருக்குமானு கேட்டேன். அதெல்லாம் இருக்கும்;ஆனா மற்ற காசு எல்லாம் மாறும்னாங்க. அஞ்சு வாழைப்பழம் வாங்கணும்னா என்ன பண்ணணும் அப்டின்னேன். ஆறு நயா பைசா கொடுக்கணும்னாங்க. அப்போ ஒரு அணாவிற்கு 6 பைசான்னா, ஒரு ரூபாய்க்கு 6 X 16 = 96 பைசாதான் அப்டின்னா, ரூபாய்க்கு 96 பைசாவா அப்டின்னு 'டாண்'ணு கேட்டேன்.(எப்படி நம்ம வாய்ப்பாடு அறிவு?) இல்ல 100 பைசா அப்டின்னாங்க. அந்த நாலு பைசா என்ன ஆச்சுன்னு கேட்டேன். அப்பா சொன்னது ஒண்ணுமே புரியலை.
அரை ரூபாய்க்கு 50 பைசா; கால் ரூபாய்க்கு 25 பைசா வரை சரியா கணக்கு வந்தது. அதுக்குப் பிறகு கணக்கு ரொம்பவே உதைச்சுது. இரண்டணாவிற்கு எத்தனை பைசா என்று கேட்டேன். அப்போ இரண்டு இரண்டணா சேர்ந்தா ஒரு கால் ரூபாய். அப்பா வசமா மாட்டிக்கிட்டாங்க. 12 பைசாவா, 13 பைசாவா? சரி அது போகுது; நாலணா கொடுத்து ஓரணாவிற்குப் பழம் வாங்கினால் மீதி 19 பைசா கேக்கணுமா, இல்லை 18 பைசாவா? அப்பா ரொம்ப பொறுமையா இதெல்லாம் கொஞ்ச நாளைக்குத்தான்; பிறகு எல்லாமே நயா பைசாவிலதான் இருக்கும்னாங்க. ஆனா, கால், அரை ரூபாய் எல்லாம் இருக்கும்னாங்க. அதுவரை சில கஷ்டம் இருக்கும்னாங்க. எனக்குப் பிடிபடலை. ரூபாய் இருக்கும்; அதிலும் கால், அரை ரூபாய் இருக்கும். ஆனால், மீதியெல்லாம் பைசாவில் இருக்கும். இது எப்படி? அப்ப எப்படி சாமான்கள் வாங்கிறதுன்னு கேட்டேன். கொஞ்ச நாளைக்கு அணாவிலும், நயா பைசாவிலும் இருக்கும்; கொஞ்சம் கொஞ்சமாக மாறி கடைசியில் எல்லாமே நயா பைசாவாக மாறிடும்னு சொன்னாங்க.
நாளும் நெருங்கி வந்திச்சு. google இந்த மாற்றம் 1957-ல் நடந்ததாகச்சொல்கிறது. அப்டின்னா அப்போ என் வயசு 12-13. அன்னைக்கி நயாபைசா புழக்கத்துக்கு வர்ரதாகச் சொன்னாங்க. எல்லாருமே, பெரியவங்க சின்னவங்கன்னு எந்த வித்தியாசமும் இல்லாம ஒரே பயங்கர எதிர்பார்ப்புடன் இருந்தோம். வீட்டிலிருந்து நாலைந்து வீடுகள் தள்ளிதான் போஸ்ட் ஆஃபீஸ் இருந்தது. காலையிலேயே பெரிய க்யூ ஆரம்பிச்சிருச்சி. நானும் மதியம் வரிசையில் போய் நின்றேன். கையில் இரண்டணா. இரண்டு போஸ்ட் கார்டு மட்டும் வாங்கி வரச் சொல்லியிருந்தார்கள். வரிசையில் நின்று ஏதாவது ஒப்புக்கு ஒரு கார்டோ கவரோ வாங்கிட்டு மீதி சில்லறையோடு வரும் ஆட்களைச் சுற்றி ஒரு பெருங்கூட்டம் - அந்தச் சில்லறைக் காசுகளைப் பார்க்க. அடேயப்பா, ஏதோ இந்தக் காலத்தில் படையப்பா படத்தில முதல் நாள் டிக்கெட் கிடைத்த 'பக்தன்' போல சில்லறை கிடைத்தவர்கள் இருந்தார்கள். நானும் என் டர்னுக்கு காத்திருந்து, கையில் சில்லறையுடன் வீடு வந்தேன். பள பளன்னு சதுர அஞ்சு பைசா, வளைவுகளோட இரண்டு பைசா,சின்னதா அழகா பள பளன்னு ஒரு பைசா என சில்லறை. பாக்க பாக்க ஆசையா இருந்திச்சு.
அப்புறம் கொஞ்ச நாள் ரொம்பவே குழப்பம்தான். அப்போதான் ஒவ்வொரு பைசாவுக்கும் மதிப்பு மரியாதை இருந்திச்சே. நாளாக நாளாக இந்த ஒரு பைசாவெல்லாம் இல்லாமலேயே போயிருச்சி; அடுத்து அஞ்சு, பத்து பைசாக்களுக்கு மரியாதை இல்லாம போயிருச்சி. பொதுவாகவே பிச்சைக்காரங்களுக்குப் பிச்சை போடறது எனக்குப் பிடிக்காது. ரொம்ப பாவமான ஆளுகளுக்கு கொஞ்சம் கூடவே போடலாம்; மற்றபடி எல்லோருக்கும் போடறது கிடையாது. உறவினர் ஒருவரோடு வெளியூர் சென்றிருந்த போது அவர் ஒரு 25 பைசாவைப் பிச்சையாகப் போட, அந்தப் பிச்சைக்காரன் உறவினரைக் கன்னா பின்னாவென்று பேச, எல்லோரும் ஏதோ நாங்கள் அந்தப் பிச்சைக்கரானிடமிருந்து எதையோ திருடிவிட்டது போல பாக்க ஆரம்பிச்சிட்டாங்க. அப்படி ஆச்சுது 25 பைசா நிலைமை. இப்போவெல்லாம், கால் ரூபாய், அரை ரூபாய் எல்லாமே காணாம போயிருச்சி.
இதுல என்னென்னா,நாலணா கொடுத்து ஓரணாவிற்குப் பழம் வாங்கினால் மீதி 18 பைசாவா, 19 பைசாவா என்பது அன்றைய பிரச்சனை; இன்றோ, பத்து ரூபாய் கொடுத்து 8ரூபாய், 60 பைசாவிறகு சாமான் வாங்கினால் மீதி ஒரு ரூபாய் மட்டும் திரும்பக்கொடுக்கும்போது, 'இன்னும் 40 பைசா கொடு' என்று கேட்கவும் முடியாமல், விட்டுட்டுப் போகவும் முடியாமல் இருப்பது இன்றைய பிரச்சனை!
பதிவு செய்தது : பண்புடன் at 1 பின்னூட்டங்கள்
பதிவு வகை : அறிமுகம், அனுபவங்கள், வார நட்சத்திரம்