பண்புடன் ஆண்டு விழா - சிறப்பு விருந்தினர் - ஆதவன் தீட்சண்யா - 1

மதியம் அக்டோபர் 9, 2008

கற்பிதங்களின் தண்டனை
- ஆதவன் தீட்சண்யா

பொற்குவையும் சொற்குவையுமே
போதுமானதாயிருக்க
உணரலும் உணர்த்தலுமின்றி
உதவாப்பண்டமெனச் செலாவணியற்று
நெடுநாள் காத்திருந்து செத்தது அன்பு.
அதற்கப்புறம்
அழுகையோ சிரிப்போ இல்லை என்னிடம்
கோபம்கூட
மல்லாத்திப்போட்ட ஆமையின் கதியிலான பின்
அழவும் தெரியாதவனென்ற முரட்டுப்பட்டம் கனக்கிறது
உடன்பிறந்த கட்டிபோல
இதயம் இதயம் என்று கதைக்கும் யாராவதொருவர்
அதை இன்னதென்று காட்டுங்கள்
என்னிடமும் இருக்கிறதாவென்று சோதித்துக்கொள்கிறேன்.

0 பின்னூட்டங்கள்: