சுயமழிந்த பொழுதுகள்
- இளவஞ்சி
மாட்டிக்கொள்ளாத கள்ளத்தனத்தின்
ஒவ்வொரு முடிவிலும்
அவன் என் காதருகே
சிக்கிய நிலைகளில் அவனை அருகில்
அண்டவிட்டதே இல்லை
காப்பாற்ற இருக்கிறதென் நாக்கு
அமைதியின் வெண்மையில் அவன்
யுகங்களின் அழுக்குகளும் கறைகளும்
என் உடல்முழுவதும் திட்டுதிட்டாய்
அசிங்கங்களே அணிகலன்கள் என் கூட்டத்தில்
பாவம் அவன் பரிதாபமாய் அங்கே
ஒருவரையொருவர் சகித்தநிலையில்
மறைத்தவைகளையே ஆதாரங்களாய்
அமையுமென் உறவுகள்
என் உள்ளறிந்தும் அவன்
என்றுமே அன்னியமாய்
அடுத்தவர் அழுக்கையும் புழுநெளியும்
புண்களையும் நோண்டி முகர்கையில்
அனைவரும் ஆவரென் சத்ருகள்
அவனுடன் இருக்கையில் இதுவொரு பிரச்சனை
அவனே நானென அவனே நானென
ஓயாது பறையடிக்க
நம்பத்தொடங்கியது என் கூட்டம்
கூடவே நானும்
மெல்ல மெல்ல அவனை
அடித்து அமர்த்தி அழுக்குகள் பூசி
புரட்டுகள் துதித்து நரகல் படைத்து
நானே அவனென சொன்னபோது
அவமானம் தாங்காமல்
செத்துப்போனான்
நிம்மதியாய் வாழத்தொடங்கினேன்
நான்
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - இளவஞ்சி - 1
மதியம் அக்டோபர் 13, 2008
பதிவு செய்தது : பண்புடன் at 10:56
பதிவு வகை : கவிதைகள், வார நட்சத்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
0 பின்னூட்டங்கள்:
Post a Comment