பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - லக்கிலுக் - 4

குற்றங்களின் ஊற்றுக்கண் இந்துமதம்!
- லக்கிலுக்


ஈவ் டீஸிங், ஊழல், கொலை, கொள்ளை இதெல்லாம் யார் செய்தாலும் குற்றம் தானே? இதுபோன்ற குற்றங்கள் மட்டுமல்லாது மோசடி, பலதாரமணம் என்று பல குற்றங்களையும் நிறைய செய்திருக்கிறார்கள் நம் இந்துமத கடவுளர்கள். குற்றங்களை செய்துவிட்டு அவையெல்லாம் நம்முடைய திருவிளையாடல் என்று பெருமை வேறு அடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

பலதாரமணம் என்பது குற்றமெனில் அறுபது ஆயிரம் மனைவிகளை மணந்த தசரதனையும், ஐந்து கணவர்களை மணந்த பாஞ்சாலியையும் குற்றவாளி என்றுதானே சொல்லவேண்டும்? சிவனுக்கு ரெண்டு, முருகனுக்கு ரெண்டு என்று ஆரம்பித்து எல்லா கடவுளருக்கு ஆளுக்கேற்ற மாதிரி மனைவிகளின் எண்ணிக்கை மாறுபட்டிருக்கிறது.

வெண்ணை திருடிய குட்டி கிருஷ்ணனை சீர்த்திருத்தப் பள்ளியில் சேர்த்திருக்க வேண்டாமா?கோபியர்களின் சேலையை மறைத்து அவர்களை ஆடையில்லாமல் அலையவிட்ட கிருஷ்ணனை ஈவ்டீஸிங் கேஸில் பிடித்து உள்ளே தள்ளியிருக்க வேண்டாமா? ஆற்றுக்குள் அதுபாட்டுக்கு போய்க்கொண்டிருந்த பாம்பை கொன்ற கிருஷ்ணன் மிருகவதை சட்டத்தின் படி குற்றவாளிதானே?

போர் செய்துகொண்டிருந்தபோது வாலியை மறைந்திருந்து பேடித்தனமாக கொலைசெய்த ராமனை தூக்கில் போட்டிருக்க வேண்டாமா? இராவணனிடமிருந்து மீண்டு வந்த சீதையை சிதையிறங்க சொன்ன ராமனை பெண்கள் சிறப்பு காவல்நிலையத்தில் புகார் செய்து முட்டிக்கு முட்டி தட்டியிருக்க வேண்டாமா?

உலகை சுற்றிவரும் போட்டியென்று அறிவித்துவிட்டு உலகை சுற்றிவந்த முருகனுக்கு பரிசு தராமல், சிவன் பார்வதியை சுற்றிவந்து குறுக்குவழியில் விநாயகன் பரிசினை தட்டிச் சென்றது ஊழலல்லவா? அந்த ஊழலுக்கு துணைபோன நீதிபதியல்லவா சிவன்?

அகலிகை மீது மோகம் கொண்டு அவரது கணவர் போல வேடம்புரிந்து அகலிகையை கற்பழித்த தேவேந்திரனை கற்பழிப்பு குற்றத்தில் உள்ளே தள்ளி காயடித்திருக்க வேண்டாம்? ரம்பை, மேனகை, ஊர்வசி என்று சூப்பர் பிகர்களை தன் அவையில் வைத்திருந்த இந்திரன் கன்னட பிரசாத்துக்கு ஒப்பானவனா இல்லையா?

திருவிளையாடல் என்று கூறி பலவேடங்கள் போட்டு பூமிக்கு வந்து மக்களை ஏமாற்றி மோசடி செய்த சிவனை மோசடி வழக்கில் கைது செய்திருக்க வேண்டாம்? பொருட்குற்றம் கண்டறிந்த நக்கீரனை கொலைசெய்த கொலைகாரனல்லவா சிவன்?

தவம் கிடந்த விசுவாமித்திரனை உறவுக்கு அழைத்த மேனகை மீது விபச்சார வழக்கு தொடர்ந்திருக்கலாம் அல்லவா?

சொல்லிக்கொண்டே போகலாம்...

இவ்வாறாக இந்து மத புராணங்களிலும், இதிகாசங்களிலும் குற்றங்களும், ஊழலும், விபச்சாரமும், கற்பழிப்பும், கொலையும், கொள்ளையும் நியாயப்படுத்தி எழுதப்பட்டிருக்கிறது. இவற்றை வாசித்தும், கேட்டும் வளரும் சமூகத்தில் குற்றங்கள் மலிந்திருப்பதில் ஆச்சரியமென்ன இருக்க முடியும்? கடவுளர்களே செய்திருக்கிறார்கள், நாங்கள் செய்வதற்கு என்ன? என்ற மனோபாவம் தானே மக்கள் மத்தியில் இருக்கும்? புராணங்களிலும், இதிகாசங்களிலும் இவ்வாறெல்லாம் இருப்பதால் அவை பெரிய குற்றமல்ல என்று அம்மதம் மீது நம்பிக்கை கொண்டவர்களுக்கு இயல்பிலேயே ஊறிவிடுகிறது.

தர்மம், நெறி, நியாயம் இவற்றையெல்லாம் மனிதருக்கு ஒன்று, கடவுளருக்கு ஒன்று என்று சித்தரித்திருப்பதே இந்து மதத்தில் இருக்கும் மிகப்பெரிய ஓட்டை. இம்மதத்தை பொந்து மதம் என்றழைப்பதே சாலப்பொருத்தம்.

2 பின்னூட்டங்கள்:

கோவி.கண்ணன் said...

//தர்மம், நெறி, நியாயம் இவற்றையெல்லாம் மனிதருக்கு ஒன்று, கடவுளருக்கு ஒன்று என்று சித்தரித்திருப்பதே இந்து மதத்தில் இருக்கும் மிகப்பெரிய ஓட்டை. இம்மதத்தை பொந்து மதம் என்றழைப்பதே சாலப்பொருத்தம்.//

லக்கி ஐயங்கார்,

நீங்கள் சொன்னதெல்லாம் உருவ வழிபாட்டுக் கற்பனைக் கதைகள், அது பிடிக்கவில்லை என்றால் வள்ளலார் வழியில் கூடச் செல்லலாம், பிள்ளைகளுக்கு அதைச் சொல்லிக் கொடுக்கலாம், இந்திய சமயங்களில் மட்டுமல்ல எல்லா மதங்களிலும் அடிப்படை வாதமும், மூட நம்பிக்கைகளும் உண்டு. மற்ற மதங்களில் அந்த் மதங்களைச் சேர்ந்தவர்கள் மறுப்புச் சொல்ல இடமில்லை. ஆனால் உங்களால் இங்கே விமர்சனம் செய்து சாடவே முடிகிறது என்பதையும் நீங்கள் நினைத்துப் பார்க்க வேண்டும்.

:)

லக்கிலுக் said...

கோவி கண்ணன் தென்கலை ஐயங்கார்!

மற்ற மதங்களிலும் நாத்திகர்கள் உண்டு. ஜெர்மனியின் பிஸ்மார்க்கில் இருந்து ஏகப்பட்ட உதாரணங்கள் உண்டு. என் வீடு குப்பையாக இருக்கிறது என்றால் நான் தான் சுத்தம் செய்தாக வேண்டும். அடுத்த வீட்டுக்காரன் வந்து சுத்தம் செய்ய எதிர்ப்பார்ப்பது முட்டாள்தனம்.

என் சமூகம் உலகளவில் இன்று கேலிக்குரியதாக போய்விட்டதற்கு என் சமூகம் சார்ந்த மதமும் காரணமாக இருப்பதால் எனக்கு மதம் மீது கோபம் வருவது இயல்பானது தானே?