இளவஞ்சி - அறிமுகம்
சார்ளி சாப்ளின் படம் பார்த்திரூக்கிறீர்களா? படம் முழுக்க விழுந்து சிரிக்கும்போதும் அதன் பின்னணியில் நீங்காத துன்ப இழையொன்று நம்மையறியாமலேயே ஒரு நிழல் போலப் பின் தொடர்வதை நம்மால் உணர முடியாது. படம் முழுக்க முடிந்து ரசித்து சிரித்தபின்னரே அது நம் சிந்தைக்குள் நுழைந்து நம்மைச் சிதைக்கும்.
இளவஞ்சியின் எழுத்துக்களில் துள்ளும் இளமையும் உற்சாகமும் சீண்டலும் இதே ரகம்தான். மிகுந்த உற்சாக மனநிலையில் வாசிக்க வைத்து அந்த உற்சாகத்தின் பின்னணியில் ஒளிந்து கிடக்கும் சோகத்தை அவர் தனக்கேயுரிய பாணியில் வெளிப்படுத்தும்போது நமக்குள் எழும் அடக்க முடியாத உணர்வுகளைச் சொல்ல முடியாது.
மிக இலகுவான வாசிப்பனுவம் மிகத் தேர்ந்த எழுத்து நடை. வலிந்து திணிக்காத இயல்பான நகைச்சுவை, சொல்வதைத் தெளியச் சொல்லும் ஆற்றல், தெளிவானவைகளே மட்டுமே பேசும் சிந்தை என்று அவசியம் வாசிக்கப்பட வேண்டிய பதிவர்களின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்திருக்கும் பதிவர்களில் இளவஞ்சியும் முக்கியமானவர்
புகைப்படக் கலையில் பித்துப்பிடித்து அலையும் இளவஞ்சி மனைவியோடும் மகள் காதம்பரி மற்றும் மகன் கதிரெழிலோடு தற்போது வசிப்பது சென்னையென்றாலும் கொங்கு மண் வாசனையில் வளர்ந்தவர். தமிழ் மணம் திரட்டியின் ஆரம்ப கால நிர்வாகிகளில் ஒருவராக இருந்தவர். மென்பொருள் துறையில் பணியாற்றுகிறார்.
அறிவுஜீவித்தனமென்பதற்காக மெனக்கெடாமல் சாமான்யர்க்ளில் ஒருவராக உலாவர விரும்பும் தனித்துவம் மிக்கவர் - நம்மைப் போலவே
பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - இளவஞ்சி - அறிமுகம்
மதியம் அக்டோபர் 17, 2008
பதிவு செய்தது : பண்புடன் at 12:15
பதிவு வகை : அறிமுகம், வார நட்சத்திரம்
Subscribe to:
Post Comments (Atom)
1 பின்னூட்டங்கள்:
//அவசியம் வாசிக்கப்பட வேண்டிய பதிவர்களின் பட்டியலில் முக்கிய இடம் பிடித்திருக்கும் பதிவர்களில் இளவஞ்சியும் முக்கியமானவர்//
அழுத்தமாய் மறுமொழிகிறேன்.
Post a Comment