பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - லக்கிலுக் - 6

மறந்துப்போவது குறித்த சில நினைவுக்குறிப்புகள் (மொழிபெயர்ப்பு)
- லக்கிலுக்


மொழிப்பெயர்த்தல் சுலபமல்ல. ஆங்கிலத்தை தமிழாக்குவதும், பிரெஞ்சினை தமிழாக்குவதும், ஏன் ஹீப்ருவை தமிழில் மொழிபெயர்ப்பதும் கூட இன்றைய உலகமயமாகிப்போன நிலையில் நமக்கு பிரச்சினை அல்ல. பைத்தியக்காரன், ஜ்யோவ்ராம் சுந்தர், ஜமாலன், சுகுணாதிவாகர், அய்யனார் மற்றும் மோகன்தாஸ் வகையறாக்கள் எழுதும் கதை, கவிதை, கட்டுரைகளை தமிழில் மொழிபெயர்ப்பது தான் இன்றைய தமிழ்சூழலில் சவாலான காரியமாக படுகிறது.

மூலத்தை அப்படியே மொழிபெயர்த்தல் ஒரு எழுத்தாளன் செய்யக்கூடியதல்ல. மூலத்தை முழுவதுமாக உள்வாங்கி அப்படியே தன் மொழிநடையில் மாற்றுபவன் தான் எழுத்தாளன் என்று சுஜாதாவோ, ரா.கி.ரங்கராஜனோ.. பட்டாம்பூச்சி புத்தக முன்னுரையிலோ அல்லது வேறு எங்கேயாவது சொல்லித் தொலைத்திருக்கிறார்கள்.

அந்த அரிய மொழிப்பெயர்ப்பு பணிகளை அவ்வப்போதாவது செய்துவிட வேண்டிய கட்டாயமும், அவசியமும் நமக்கு இச்சூழலில் கொஞ்சமாவது இருக்கிறது. பின்நவீனத்துவ பிச்சுவாப் பக்கிரியான சுகுணாதிவாகர் என்பவர் எழுதிய கவிதை கீழே. :

இடுக்குகளில் இருந்து...

நெடுநேரம் நினைவுவரவில்லை
ஒவ்வொன்றாய் முகங்களை
உதிர்த்துப்பார்க்கிறேன்.
பெயர்களின் குவியலில்
கைவிட்டுப் பார்த்தும்
அகப்படவில்லை ஏதும்.
நாவால் துழாவியும்
வெளிவராத மாமிசத்துண்டிற்காய்
வீணாய்ப்போயிற்று
நான்கைந்து ஈர்க்குச்சிகள்.
ஒரு சேப்டிபின்னின்
முனைகிழிந்து
வந்துதொலைத்தது ரத்தம்
வராததென்னவோ
இடுக்கில் சிக்கிக்கொண்ட
எச்சில் மாமிசம்.
பிரயத்தன இறுதியில்
விரல்துழாவி
எடுத்த இறைச்சியை
மீண்டும் சுவைக்கிறேன்.
என்னைக் கடந்து
அவன்
வெகுதூரம் சென்றபிறகுதான்
சடாரென ஒளிர்கிறது
அவன் பெயர்.

இது எந்த மொழி என்று புரியாமல் கோவணத்தை உருவிக்கொண்டு ஓடியவர்கள் ஏராளம். பின்நவீனத்துவ பிடாரிகள் எழுதுவது முழுவதையும் என்னால் தமிழ்ப்படுத்த இயலவில்லை என்றாலும், இக்கவிதையை மட்டுமாவது தமிழ்ப்படுத்த முயற்சிக்கிறேன்.

மொழிபெயர்க்கப்பட்ட கீழ்க்கண்ட கவிதையை புரிந்துகொள்வதற்கான குறிப்புகள் :

தேவையான பொருட்கள் :

1) பெல்ட் போட்ட டவுசர்
2) டவுசருக்குள் பாதுகாப்புக்கு ஒரு கோவணம்

அக்குளில் இருந்து...

கூட சரக்கடிச்ச
நாதாரிப்பய
நவுந்து போறான்..
கூப்புடலாம்னா பார்த்தா
அவன் பேரு என்னா..
அய்யோ மறந்துப்போச்சே?

லுங்கிய ஏத்திக்கினு
லோடு ஏத்த
மார்க்கெட்டுக்கு போனா..
அதே நாதாரி!
கூப்புடலாம்னா பார்த்தா
அவன் பேரு என்னா..
அய்யோ மறந்துப்போச்சே?

காஜா பீடி
வலிச்சிக்கினு
மாநகராட்சி கக்கூஸ்லே
புத்தன் மாதிரி
உட்கார்ந்தப்போ தான்
டகால்னு
ஞாவகம் வருது
அவன் பேரு
டமார் குமாரு!!

0 பின்னூட்டங்கள்: