பண்புடன் ஆண்டு விழா - வார நட்சத்திரம் - கானா பிரபா 6

வி.எஸ்.நரசிம்மனின் தேன் மழையிலே...!
- கானா பிரபா



இசைஞானி இளையராஜாவைத் தொடர்ந்து அடுத்த வரிசையில் நான் நேசிக்கும் இசையமைப்பாளர்களில் முதன்மையானவர் வி.எஸ்.நரசிம்மன். கே.பாலசந்தர் தனது "அச்சமில்லை....அச்சமில்லை...!" திரைக்காக இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தப்பட்ட இவர் தமிழ்த் திரையுலகில் இசையமைப்பாளராகப் பணியாற்றியது மிகச் சொற்பப் படங்களே. ஆனால் பல பாடல்களுக்குப் பின்னால் இவரின் ஆவர்த்தனம் சேர்ந்திசையாக மிளிர்ந்திருக்கின்றது.


இன்றைய ஒலிப்பகிர்வில் வி.எஸ்.நரசிம்மன் திரையுலகிற்கு இசையமைப்பாளராக வந்த அறிமுகம் குறித்த பார்வையும் தொடர்ந்து "அச்சமில்லை அச்சமில்லை" திரைக்காக இவர் முதன் முதலில் இசையமைத்த "ஆவாரம் பூவு" பாடலும் இடம்பெறுகின்றது.


தொடர்ந்து பாலசந்தரின் உதவியாளராக இருந்த இயக்குனர் அமீர்ஜான் இயக்கத்தில் வெளிவந்த "புதியவன்" திரைக்காக "நானோ கண் பார்த்தேன்" என்ற பாடல் என் பாடல் பொக்கிஷத்திலிருந்து உங்களுக்காக வெளிவருகின்றது.


இதனையடுத்து கே.பாலசந்தரின் இயக்கத்தில் "கல்யாண அகதிகள்" திரையில் இருந்து சுசீலா பாடும் "மனசுக்குள் உட்கார்ந்து மணியடித்தாய்",


அடுத்து, இளையராஜாவை மூலதனமாக வைத்துப் பல இசைச் சித்திரங்களை அளித்த தயாரிப்பாளர் கோவைத்தம்பி தயாரிப்பில், ஈ.ராம்தாஸ் இயக்கத்தில் வந்த படம் "ஆயிரம் பூக்கள் மலரட்டும்". இத்திரைப்படத்தில் இருந்து "ஆயிரம் பூக்கள் மலரட்டும்" என்ற பாடல் பி.சுசீலா குரலில் ஒலிக்கின்றது.


தொடர்ந்து கே.பாலசந்தரின் முதல் சின்னத்திரை விருந்தான "ரயில் சினேகம்" படைப்பில் "இந்த வீணைக்குத் தெரியாது" என்ற பாடலை கே.எஸ்.சித்ரா பாடுகின்றார்.

"தாமரை நெஞ்சம்" என்ற தமிழ்ப்படத்தினைக் கன்னடத்தில் "முகிலு மல்லிகே" என்று மொழிமாற்றம் செய்தபோது வி.எஸ்.நரசிம்மனுக்கு முதன் முதலில் கன்னடத்திரைப்பட இசையமைப்பாளராக அறிமுகமானார். அப்படத்தில் இருந்து ஒரு பாடல் பி.சுசீலா, வாணி ஜெயராம் இணைந்து பாடக் கேட்கலாம்.


அடுத்து சுரேஷ் மேனன் இயக்கத்தில் வந்த "பாச மலர்கள்" திரைப்படத்தில் இருந்து சுஜாதா, எஸ்பி.பி பாடும் இனிமையான பாடலான "செண்பகப் பூவைப் பார்த்து" என்ற பாடல் ஒலிக்கின்றது.


நிறைவாக இளையராஜாவின் தனி இசைப் படைப்புக்களுக்கு உருவம் கொடுத்தவர்களில் ஒருவரான வி.எஸ்.நரசிம்மன் இல் வழங்கும் வயலின் இசை மனதை நிறைக்க வருகின்றது.


இந்த நிகழ்ச்சிக்கான தகவல் குறிப்புக்களைப் பல ஆண்டுகளுக்கு முன்னர் சினிமா எக்ஸ்பிரஸ் இதழில் தொடராக வெளிவந்த "திரையிசைச் சாதனையாளர்கள்" பகுதியில் இருந்து பத்திரப்படுத்தித் தேவையான பகுதிகளை மட்டும் வானொலி வடிவமாக்கியிருக்கின்றேன். இதோ தொடர்ந்து கேளுங்கள்.

http://www.radio.kanapraba.com/Nara1.mp3"

http://www.radio.kanapraba.com/Nara2.mp3

0 பின்னூட்டங்கள்: